சென்னையில் மோடி போஸ்டர் மீது சாணி வீச்சு: சிசிடிவியால் சிக்கிய பெண் கைது

சென்னையில் மோடி போஸ்டர் மீது சாணி வீச்சு: சிசிடிவியால் சிக்கிய பெண் கைது

சென்னையில் பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில் ஒரு பெண் சாணியடித்த சம்பவம் பாஜகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடியின் 72-வது பிறந்த நாளையொட்டி சென்னை மேற்கு தாம்பரம், முல்லைநகர் பகுதியில் உள்ள நேற்று முன்தினம் பாஜகவினரால் ஏராளமான போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் முல்லை நகர் பிரதான சாலையில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டரில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோரின் படங்களில் மர்மநபர்கள் சாணி அடித்திருந்தனர்.

இன்று காலையில் இந்த போஸ்டரைப் பார்த்த பாஜகவினர் அதிர்ச்சியடைந்தனர். தாம்பரம் நகர பாஜக தலைவர் கணேஷ் தலைமையில் கண்டன கோஷங்கள் எழுப்பினர். அத்துடன் ஊர்வலமாகச் சென்று தாம்பரம் - முடிச்சூர் பிரதான சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அவர்களைச் சமாதானப்படுத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனால் அவர்கள் கலைந்து சென்றனர்.

இதையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது இன்று ஒரு பெண், மோடி போஸ்டரின் மீது சாணி அடிப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து விசாரணை நடத்திய போலீஸார் அந்த பெண்ணை கைது செய்தனர். இந்த சம்பவம் தாம்பரம் பகுதி பாஜகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in