ராகுல் காந்தி - ஆனி ராஜா மோதலில் எவர் வென்றாலும் இந்தியா கூட்டணிக்கே வெற்றி! -இரா.முத்தரசனின் அடடே அரசியல் கணக்கு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன்
Updated on
2 min read

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸின் ராகுல் காந்தி வென்றாலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆனி ராஜா வென்றாலும், இந்தியா கூட்டணிக்கே வெற்றி என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "இன்னும் சில தினங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த மக்களவைத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படவும் ஜனநாயகம் காப்பாற்றப்படவும் அரசியலமைப்புச் சட்டம் காப்பாற்றப்படுவும் வாய்ப்புகள் ஏற்படும்.

அரசியல் அமைப்புச் சட்டத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்புகள் பாதுகாக்கப்பட, இன்றைக்கு இருக்கக்கூடிய மோடி தலைமையிலான ஆட்சி அகற்றப்பட வேண்டும். இல்லை என்று சொன்னால் நாடு பேராபத்தை சந்திக்கும். இந்தியா கூட்டணி ஏற்பட தமிழ்நாடு தான் முக்கிய காரணம். குறிப்பாக மு.க.ஸ்டாலின் அவர்கள். திமுக கூட்டணியில் அங்கம் பெற்று இருக்கிற கட்சிகள் உடனான தொகுதி பங்கோடு நேற்றுடன் முடிவடைந்து இருக்கிறது. இந்திய அளவிலும் நல்ல கூட்டணி உருவாகி இருக்கிறது” என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன்

மேலும், “ராஜினாமா செய்த தேர்தல் ஆணையர் அருண் கோயில் ஏன் ராஜினாமா செய்தார் என்பதை நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டும். அல்லது ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட அரசாங்கம் நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டும். நேரு காலம் தொட்டு பிரதமர் நிவாரண நிதி என்ற ஒரு நிதி மத்திய அரசாங்கத்தால் பராமரிக்கப்பட்டு வந்தது. அது நிவாரண பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.

அதற்கு வரவு செலவு கணக்கு உண்டு. தகவல் உரிமைச் சட்டத்திலும் கேட்டுப் பெற முடியும். ஆனால் மோடி பிரதமர் ஆன பிறகு அது கலைக்கப்பட்டு பி.எம்.கேர் என்ற ஒரு புதிய நிதி அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அதில் எவ்வளவு நிதி வந்தது? எங்கு போனது? என்பதை யாரும் கேட்க முடியாது. இதைக் காட்டிலும் பெரிய ஊழல் என்னவாக இருக்க முடியும்” என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன்

தொடர்ந்து பேசிய அவர், “தமிழகத்திற்கு எந்த உதவியும் செய்யாமல் அவர்கள் பாதிக்கப்பட்டு நிற்கதியாக நிற்கிற பொழுது கூட உதவி செய்யாத பிரதமருக்கு, தமிழகத்தில் ஓட்டு கேட்க என்ன உரிமை இருக்கிறது? தமிழகத்திற்கு வருவதற்கு மோடிக்கு தார்மீக ரீதியான உரிமை இல்லை. கேரளாவில் இந்தியா கூட்டணி தான் போட்டியிடுகிறது. மூன்றாவது அணி இல்லை. ராகுல் காந்தி வெற்றி பெற்றாலும், ஆனி ராஜா வெற்றி பெற்றாலும் அந்த வெற்றி இந்தியா கூட்டணியின் வெற்றிதான்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in