காய்கறி வாங்கிவிட்டு வீடு திரும்பியபோது கொடூர தாக்குதல்: கொல்லப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்

காய்கறி வாங்கிவிட்டு வீடு திரும்பியபோது கொடூர தாக்குதல்: கொல்லப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்

இந்திய கம்யூணிஸ்ட் கட்சியை சேர்ந்த தாரவேந்திரம் ஊராட்சி மன்றத் தலைவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓசூர் பகுதியில் உள்ள தாரவேந்திரம் ஊராட்சி மன்ற தலைவராகப் பதவி வகிப்பவர் நரசிம்ம மூர்த்தி(42). இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகியாகவும் செயல்பட்டு வருகிறார். நேற்று தளியிலிருந்து காய்கறிகளை வாங்கிக்கொண்டு தனது ஊரான பி.பி.பாளையத்திற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த கிராமத்திற்கு அருகில் மாந்தோப்பு பகுதியில் மறைந்திருந்த மர்மநபர்கள் அவரை தலையில் உருட்டுக் கட்டையால் அடித்துக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடினர். ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த நரசிம்ம மூர்த்தியைப் பார்த்த அப்பகுதியினர், காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நரசிம்ம மூர்த்தியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகத் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஊராட்சி மன்றத் தலைவர் கொலை செய்யப்பட்டதால் பிபி பாளையம் பகுதியில் பதற்றம் நிலவிவருகிறது. அசம்பாவிதம் ஏற்படாமலிருக்க மாவட்ட எஸ்பி தலைமையில் அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தளி சட்டமன்ற தொகுதியில் திமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கிடையே புகைச்சல் நிலவி வருகிறது. இந்நிலையில் அரசியல் காரணங்களுக்காக அவர் கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in