நீதிமன்றங்களுக்கும் விடுமுறை... தேர்தல் நாளில் இயங்காது!

உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 19ம் தேதியன்று நீதிமன்றங்களும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 19 ம் தேதியன்று தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

இந்தத் தேர்தலில் 100% வாக்கு பதிவு நடைபெற வேண்டும் என்பதற்காக இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் அனைத்து தொழிற்சாலைகள், நிறுவனங்கள், அலுவலகங்கள் உள்ளிட்டவைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

இதனை ஏற்று தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அரசு அலுவலகங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்கு உரிமையாளர்களும் ஏப்ரல் 19-ல் திரையரங்கம் இயங்காது என்று அறிவித்துள்ளனர். 

இந்த நிலையில் தற்போது நீதிமன்றங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 19 ல் சென்னை உயர்நீதிமன்றம், மதுரை உயர்நீதிமன்ற கிளை மற்றும் கீழமை நீதிமன்றங்கள் என அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும், அன்றைய தினம் விசாரிக்கப்பட வேண்டிய வழக்குகள் தேர்தலுக்குப் பிறகு பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in