முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான வழக்கு... அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

முன்னாள் அமைச்சர் காமராஜ்
முன்னாள் அமைச்சர் காமராஜ்

முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான 350 கோடி ரூபாய் முறைகேடு புகார் குறித்த வழக்கின் விசாரணை நிலை அறிக்கையை  நவம்பர் 22 ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர் ஆர்.காமராஜ். தற்போது திருவாரூர் மாவட்ட அதிமுக செயலாளராகவும், நன்னிலம் தொகுதி எம்எல்ஏவாகவும் உள்ளார். இவர், கடந்த 2015 ஏப்ரல் 1-ம் தேதி முதல் 2021 மார்ச் 31 வரை அமைச்சராக இருந்தபோது, அரசுப் பதவியை தவறாக பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக தனது பெயரிலும், குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் பெயரிலும் ரூ.58 கோடியே 44 லட்சத்து 38 ஆயிரத்து 252 அளவுக்கு சொத்து சேர்த்தது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் தெரியவந்தது.

இதன் அடிப்படையில், அமைச்சர் காமராஜ், அவரது மகன்கள் எம்.கே.இனியன், எம்.கே.இன்பன், உறவினர் ஆர்.சந்திரசேகரன், நண்பர்கள் பி.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டவர்களின் மீது வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆர்.காமராஜ்
ஆர்.காமராஜ்

இந்த வழக்கு விசாரணை இன்று லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் நடந்த நிலையில் வழக்கு நவம்பர் 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது 49 டெண்டர் ஆவணங்களில் உள்ள 24 ஆயிரம் பக்கங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்பதால் விசாரணைக்கு கால வரம்பு நிர்ணயிக்க முடியாது என்று அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். 

இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 22ம் தேதிக்கு  தள்ளிவைத்த நீதிபதி, அன்று இந்த வழக்குகள் தொடர்பாக விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டார்.

இதையும் வாசிக்கலாமே...

மும்பை காவல் துறைக்கு திடீர் மிரட்டல்: இந்தியா - நியூசிலாந்து போட்டிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

நரி, அமுல் பேபி என தினேஷ்- விஷ்ணு மோதல்:பிக் பாஸ் இல்லத்தில் அதகளம்!

'பிரதமர் மோடிதான் சிறந்த நடிகர்' - நடிகர் பிரகாஷ்ராஜ் காட்டம்!

என்.சங்கரய்யா உடலுக்கு அரசு மரியாதை: தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

ஹிஜாப் அணிந்து தேர்வெழுத தடையா?: உயர் கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in