
மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதல்வராக இன்று பதவியேற்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜித் பவார், மாநிலத்தில் பாஜக - சிவசேனா கூட்டணியுடன் கைகோர்த்தது ஏன் என்பது குறித்து விளக்கமளித்தார்.
ஏக்நாத் ஷிண்டே அரசின் துணை முதல்வராக பதவியேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அஜித் பவார், “ பிரதமர் இந்தியாவை முன்னோக்கி கொண்டு செல்கிறார். அவர் மற்ற நாடுகளிலும் பிரபலமாக உள்ளார். அவரது தலைமையை அனைவரும் பாராட்டுகிறார்கள். வரும் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் பாஜகவுடன் இணைந்து போராடுவோம். அதனால் தான் இந்த முடிவை எடுத்துள்ளோம்.
நாங்கள் பதவிப்பிரமாணம் செய்துவிட்டோம். அடுத்த அமைச்சரவை விரிவாக்கத்தில் மேலும் சில அமைச்சர்கள் சேர்க்கப்படுவார்கள். மகாராஷ்டிராவின் முன்னேற்றத்திற்காக நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம். அதனால்தான் இந்த முடிவை எடுத்துள்ளோம். எங்கள் எம்எல்ஏக்களில் பெரும்பாலானோர் இதில் திருப்தி அடைந்துள்ளனர்” என்று அவர் கூறினார்.