தொடங்கியது வாக்கு எண்ணிக்கை... ஆரம்ப அறிகுறிகள் என்ன சொல்கின்றன?

தொடங்கியது வாக்கு எண்ணிக்கை... ஆரம்ப அறிகுறிகள் என்ன சொல்கின்றன?

உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கிவிட்டது.

யாருக்கு முன்னிலை?

தற்போது தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. உத்தர பிரதேசத்தில் ஆரம்பத்திலிருந்தே பாஜகவே முன்னிலை வகிக்கிறது.

உத்தர பிரதேசத்தில் 60-க்கும் அதிகமான இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. சமாஜ்வாதி கட்சிக் கூட்டணியின் முன்னிலை எண்ணிக்கையும் மளமளவென அதிகரித்துவருகிறது. அஸ்தினாபூர், அம்ரோஹா உள்ளிட்ட தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. மேற்கு உத்தர பிரதேசத்தில் உள்ள இந்தத் தொகுதிகள், விவசாயிகளின் போராட்டம் காரணமாக பாஜகவுக்கு வெற்றிவாய்ப்பைத் தர வாய்ப்பில்லை எனக் கருதப்பட்டவை.

பஞ்சாபில் 20-க்கும் அதிகமான இடங்களில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸும் கணிசமான இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

கோவாவில் பாஜக 15-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிகளும் கணிசமான எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கின்றன. தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியில் காங்கிரஸும் திரிணமூலும் கைகோர்த்தால் பாஜகவுக்குச் சவால் விடுக்க முடியும் எனத் தெரிகிறது.

மணிப்பூரிலும் பாஜகவே முன்னிலை வகிக்கிறது.

இதுவரை உத்தராகண்டில் மட்டும்தான் காங்கிரஸ் கட்சிக்கு முன்னிலை கிடைத்திருக்கிறது. 13 இடங்களில் காங்கிரஸும் 10 இடங்களில் பாஜகவும் முன்னிலை வகிக்கின்றன.

தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், காவலர்கள், ராணுவத்தினர், கரோனா காரணமாக 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆகியோர் தபால் வாக்குகளைப் பதிவுசெய்திருக்கிறார்கள். தபால் வாக்குகளின் எண்ணிக்கையை வைத்து முடிவை கணிக்க முடியாது.

வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணுவது தொடங்கியதும், காலை 9.30 மணிக்கு மேல் ஓரளவு நிலவரம் தெரியவரும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in