ஆகஸ்ட் 2-ம் தேதி பொறியியல் கலந்தாய்வு தொடக்கம்: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடிஆகஸ்ட் 2-ம் தேதி பொறியியல் கலந்தாய்வு தொடக்கம்: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்கும் என்றும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பொறியியல் படிப்பிற்கு அதிகளவில் மாணவர்கள் சேருவார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’ பொறியியல் படிப்புகளுக்கு சேர மாணவர்கள் இன்று தொடங்கி அடுத்த மாதம் ஜூன் 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 446 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2-ம் தொடங்குகிறது. முதலில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2 முதல் 5 வரை நடைபெறவுள்ளது. பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 12-ம் தேதி வெளியிடப்படும்.

பொதுப் பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட் 7-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 24 வரை நடைபெற உள்ளது. பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு செப்.26 முதல் 29 வரை நடைபெற உள்ளது. பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு அக்டோபர் 3-ம் தேதி நிறைவு பெறுகிறது.

ஜூன் 7-ம் தேதி ரேண்டம் எண்ணும், தரவரிசை பட்டியல் ஜூலை 12-ம் தேதி வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 12 முதல் 30 வரை நடக்கும்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கல்வியில் அரசியல் கலக்கவில்லை, தற்போது தான் மாணவர்கள் அழைத்து வைத்து சதானம் குறித்தெல்லாம் வகுப்பெடுக்கிறார்கள். யூஜிசி சட்ட விதிகள் குஜராத் மாடலுக்கு பொருந்தாது. ஆளுநர் மத்திய அரசின் பிரதிநிதியாக அவர் செயல்படுகிறார். திராவிடம் வந்த பிறகு சனாதனம் காலியாகிவிட்டது. காலாவதியாக வேண்டியது ஆளுநர் பதவி மட்டும் தான்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in