300 ரூபாய் பேனருக்கு 7,906 ரூபாய் பில்; 'நம்ம ஊரு சூப்பரு' திட்டத்தில் முறைகேடு: ஆதாரங்களை வெளியிட்ட ஜெயக்குமார்!

300 ரூபாய் பேனருக்கு 7,906 ரூபாய் பில்; 'நம்ம ஊரு சூப்பரு' திட்டத்தில் முறைகேடு: ஆதாரங்களை வெளியிட்ட ஜெயக்குமார்!

'நம்ம ஊரு சூப்பரு' பேனர் அடித்த திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியிருக்கிறார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “தஞ்சாவூர் மாவட்டத்தில் 14 ஒன்றியங்கள், 589 பஞ்சாயத்துகள் இருக்கிறது. அந்த கிராமங்களில் பேனர் வைப்பதற்கு அனுமதி அளித்து மாவட்ட ஆட்சியர் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அதில் கிராம ஊராட்சிகளில் நம்ம ஊரு சூப்பரு விளம்பர பதாகைகள் அமைப்பதற்கு போதுமான நிதி இருக்கும் ஊராட்சிகளில் ரூ.7,906 செலவில் பேனர் வைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதை எதிர்க்கட்சித் தலைவர் ஆளுநரிடம் புகார் மனுவாக கொடுத்திருக்கிறார்.

கே.ஆர் பிரிண்டர்ஸ் என்ற பேனர் அடிக்கும் கடைக்குப் பணம் செலுத்தியுள்ளார்கள். பேனரின் விலை 6700 ரூபாய், 1206 ரூபாய் வரியும் செலுத்தி இருக்கிறார்கள். இவை இ பேமென்ட் மூலம் செலுத்தப்பட்டுள்ளது. எலுமிச்சை பழத்தையும், பூசனிக்காயையும் மறைப்பவர்களைப் பார்த்திருப்போம். மலையே விழுங்குபவர்களை பார்த்திருக்கிறோமா? தமிழகத்தில் 13,600க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் இருக்கிறது. இதன் மூலம் எவ்வளவு பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கணக்கிட்டால் தெரிந்துவிடும்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in