மாநகராட்சி, நகராட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு: 2-வது பட்டியலை வெளியிட்டது அதிமுக

மாநகராட்சி, நகராட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு: 2-வது பட்டியலை வெளியிட்டது அதிமுக
ஓபிஎஸ், ஈபிஎஸ்

மாநகராட்சி, நகராட்சி பதவிகளுக்கான அதிமுக வேட்பாளர்களின் 2-வது பட்டியலை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.

சேலம் மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 60 வேட்பாளர்களின் பெயர்களும், ஆவடி மாநகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 48 வேட்பாளர்களின் பெயர்களும், திருச்சி மாநகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 65 வேட்பாளர்களின் பெயர்களும், மதுரை மாநகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 100 பெயர்களும், சிவகாசி மாநகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 48 வேட்பாளர்களின் பெயர்களும், தூத்துக்குடி மாநகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 60 வேட்பாளர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதேபோல் நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 30 வேட்பாளர்களின் பெயர்களும், தேனி அல்லி நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 33 வேட்பாளர்களின் பெயர்களும், கூடலூர் நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 21 வேட்பாளர்களின் பெயர்களும், போடிநாயக்கனூர் நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 32 வேட்பாளர்களின் பெயர்களும், கம்பம் நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு வேட்பாளர்களின் 33 பெயர்களும், சின்னமனூர் நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 27 வேட்பாளர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 30 வேட்பாளர்களின் பெயர்களும், மேட்டூர் நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 30 வேட்பாளர்களின் பெயர்களும், ஆத்தூர் நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 33 வேட்பாளர்களின் பெயர்களும், நரசிங்கபுரம் நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 18 வேட்பாளர்களின் பெயர்களும், தாரமங்கலம் நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 27 வேட்பாளர்களின் பெயர்களும், இடங்கணசாலை நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 27 வேட்பாளர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், செங்கல்பட்டு நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 32 வேட்பாளர்களின் பெயர்களும், மறைமலைநகர் நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 21 வேட்பாளர்களின் பெயர்களும், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 30 வேட்பாளர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மத்திய மாவட்டம் பூந்தமல்லி நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 19 வேட்பாளர்களின் பெயர்களும், திருவள்ளூர் தெற்கு மாவட்டம் திருவேற்காடு நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 18 வேட்பாளர்களின் பெயர்களும், திருநின்றவூர் நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 27 வேட்பாளர்களின் பெயர்களும், திருவள்ளூர் மேற்கு மாவட்டம், திருவள்ளூர் நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 27 வேட்பாளர்களின் பெயர்களும், திருத்தணி நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 20 வேட்பாளர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் (திருவத்திபுரம்) நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 27 வேட்பாளர்களின் பெயர்களும், வந்தவாசி நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 24 வேட்பாளர்களின் பெயர்களும், ஆரணி நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 31 வேட்பாளர்களின் பெயர்களும், திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், திருவண்ணாமலை நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 39 வேட்பாளர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 32 வேட்பாளர்களின் பெயர்களும், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம், பவானி நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 25 வேட்பாளர்களின் பெயர்களும், ஈரோடு புறநர் மேற்கு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 30 வேட்பாளர்களின் பெயர்களும், சத்தியமங்கலம் நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 27 வேட்பாளர்களின் பெயர்களும், புன்செய்யுளியம்பட்டி நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 18 வேட்பாளர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம், துறையூர் நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 24 வேட்பாளர்களின் பெயர்களும், முசிறி நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 24 வேட்பாளர்களின் பெயர்களும், திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், துவாக்குடி நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 21 வேட்பாளர்களின் பெயர்களும், மணப்பாறை நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 26 வேட்பாளர்களின் பெயர்களும், லால்குடி நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 22 வேட்பாளர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 21 வேட்பாளர்களின் பெயர்களும், அரியலூர் நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 18 வேட்பாளர்களின் பெயர்களும், நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினம் நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 34 வேட்பாளர்களின் பெயர்களும், வேதாரண்யம் நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 21 வேட்பாளர்களின் பெயர்களும், மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 24 வேட்பாளர்களின் பெயர்களும், மயிலாடுதுறை நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 36 வேட்பாளர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம், மேலூர் நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 27 வேட்பாளர்களின் பெயர்களும், விருதுநகர் கிழக்கு மாவட்டம், சாத்தூர் நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 24 வேட்பாளர்களின் பெயர்களும், அருப்புக்கோட்டை நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 36 வேட்பாளர்களின் பெயர்களும், விருதுநகர் மேற்கு மாவட்டம், விருதுநகர் நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 36 வேட்பாளர்களின் பெயர்களும், ராஜபாளையம் நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 42 வேட்பாளர்களின் பெயர்களும், ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 33 வேட்பாளர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 36 வேட்பாளர்களின் பெயர்களும், தேவக்கோட்டை நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 27 வேட்பாளர்களின் பெயர்களும், சிவகங்கை நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 27 வேட்பாளர்களின் பெயர்களும், மானாமதுரை நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 26 வேட்பாளர்களின் பெயர்களும், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 36 வேட்பாளர்களின் பெயர்களும், தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருச்செந்தூர் நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 27 வேட்பாளர்களின் பெயர்களும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம், குளச்சல் நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 24 வேட்பாளர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் இணைந்து, கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் வெற்றி பெற்றிடும் வகையில் சிறந்த முறையில் தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும் என்று ஓபிஎஸ், ஈபிஎஸ் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in