
தி.மு.க சார்பாக போட்டியிடும் மாநகராட்சி மேயர், துணை மேயர் வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள மாநகராட்சி மன்ற மேயர், துணை மேயர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சி மேயர் வேட்பாளராக ஆர்.பிரியாவும், துணை மேயர் வேட்பாளராக மு.மகேஷ்குமாரும், மதுரை மாநகராட்சி மேயர் வேட்பாளராக இந்திராணியும், திருச்சி மேயர் வேட்பாளராக மு.அன்பழகனும், துணை மேயர் வேட்பாளராக திவ்யா தனக்கோடியும், திருநெல்வேலி மாநகராட்சி வேட்பாளராக பி.எம்.சரவணனும், துணை மேயர் வேட்பாளராக கே.ஆர்.ராஜூயும், கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக கல்பனாவும், துணை மேயர் வேட்பாளராக இரா.வெற்றிச்செல்வனும், சேலம் மாநகராட்சி மேயர் வேட்பாளராக ஏ.இராமச்சந்திரனும்,
திருப்பூர் மாநகராட்சி மேயர் வேட்பாளராக என்.தினேஷ்குமாரும், ஈரோடு மாநகராட்சி மேயர் வேட்பாளராக நாகரத்தினமும், துணை மேயர் வேட்பாளராக செல்வராஜிம், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் வேட்பாளராக என்.பி.ஜெகனும், துணை மேயர் வேட்பாளராக ஜெனிட்டா செல்வராஜிம், ஆவடி மாநகராட்சி மேயர் வேட்பாளராக உதயகுமாரும், தாம்பரம் மாநகராட்சி மேயர் வேட்பாளராக வசந்தகுமாரி கமலக்கண்ணனும், துணை மேயர் வேட்பாளராக ஜி.காமராஜிம், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் வேட்பாளராக மகாலட்சுமி யுவராஜிம், வேலூர் மாநகராட்சி மேயராக சுஜாதா ஆனந்தகுமாரும், துணை மேயர் வேட்பாளராக சுனிலும்,
கடலூர் மாநகராட்சி மேயர் வேட்பாளராக சுந்தரியும், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் வேட்பாளராக சண்.இராமநாதனும், துணை மேயர் வேட்பாளராக அஞ்சுகம் பூதியும், கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் வேட்பாளராக தமிழழகனும், கரூர் மாநகராட்சி மேயர் வேட்பாளராக கவிதா கணேசனும், துணை மேயராக தாரணி பி.சரவணனும், ஓசூர் மாநகராட்சி மேயர் வேட்பாளராக எஸ்.ஏ.சத்யாவும், துணை மேயர் வேட்பாளராக சி.ஆனந்தைய்யாவும்,
திண்டுக்கல் மாநகராட்சி மேயர் வேட்பாளராக இளமதியும், துணை மேயர் வேட்பாளராக இராஜப்பாவும், சிவகாசி மாநகராட்சி மேயர் வேட்பாளராக சங்கீதா இன்பமும், துணை மேயர் வேட்பாளராக விக்னேஷ் பிரியாவும், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் வேட்பாளராக மகேஷும், துணை மேயர் வேட்பாளராக மேரி பிரின்சியும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.