அதிர்ச்சி... ராஜஸ்தான் முன்னாள் முதல்வருக்கு பன்றிக் காய்ச்சல்: மருத்துவமனையில் அனுமதி!

அசோக் கெலாட்
அசோக் கெலாட்

ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கொரோனா, பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டெல்லியில் பனிமூட்டம்
டெல்லியில் பனிமூட்டம்

வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக விமானம், ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாறிவரும் வானிலைக்கு மாற்றத்தால் குழந்தைகள், முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகரித்து வரும் குளிர்காரணமாக பொதுமக்கள் அதிகாலையில் வீட்டை விட்டு வெளியேற தயங்குகிறார்கள்.

டெல்லி உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களில் மூடுபனி காரணமாக விபத்துக்களும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக பகலிலேயே வாகனங்களில் விளக்குகளை எரிய விட்டுச் செல்கின்றனர். மேலும், அதிக குளிர் காரணமாக குழந்தைகள் முதியவர்கள் காய்ச்சல், இருமல், சளி மற்றும் சுவாசிப்பதில் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

 அசோக் கெலாட்
அசோக் கெலாட்

ராஜஸ்தானில் தற்போது கடும் குளிர் நிலவுகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக பருவகால நோய்கள் தாக்கத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான அசோக் கெலாட்டும் கொரோனா, பன்றிக்காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் அசோக் கெலாட் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், அசோக் கெலாய் உடல்நிலை சீராக உள்ளது. அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார் என்று மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அசோக் கெலட் தனது எக்ஸ் தளத்தில், “ நீங்கள் அனைவரும் உங்கள் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள் ” என்று பதிவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in