தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு: எச்சரிக்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு: எச்சரிக்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Updated on
1 min read

"தமிழகத்தில் ஒரு மாதத்துக்கு முன் 2 பேருக்கு மட்டுமே இருந்த கொரோனா தற்போது 20 பேருக்கு மேல் அதிகரித்துள்ளது" என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் இன்று சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெற்று வருகின்றன. சென்னை சைதாப்பேட்டையில் சிறப்பு காய்ச்சல் முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சமீப காலமாக இந்தியா முழுவதும் H3N2 வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. காய்ச்சலைத் தடுக்க கடந்த வாரம் ஐசிஎம்ஆர் அறிவிப்பு வெளியிட்டது. இதனடிப்படையில் முதல்வர் உத்தரவின் படி 1,000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம்கள் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் 200 வர்டுகளில் 200 சிறப்பு காய்ச்சல் முகாம்களும், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 800 இடங்களிலும் முகாம்கள் நடக்கின்றன.

தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒரு மாதத்துக்கு முன் 2 பேருக்கு மட்டுமே இருந்த கொரோனா தற்போது 20 பேருக்கு மேல் அதிகரித்துள்ளது. ஒமைக்ரான் வகை கொரோனா அதிகரித்தாலும் அதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை. இதனால் பதற்றம் கொள்ள தேவையில்லை. பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி ஆகியவற்றை பின்பற்றுவது நல்லது. கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றினாலே இன்ப்ளூயன்ஸா தொற்று பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும். மக்கள் தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருந்து ஐசிஎம்ஆர் அறிவுறுத்தலின்படி முகக் கவசம் அணிந்தால் பாதிப்புகளை தவிர்க்கலாம்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in