ரவிக்குமார் எம்.பி
ரவிக்குமார் எம்.பி

விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி ரவிக்குமாருக்கு கரோனா

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் எம்.பி ரவிக்குமாருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக எம்.பி ரவிக்குமார் தனது முகநூல் பக்கத்தில், ‘முதல் இரு அலைகளில் நான் சிக்கவில்லை. பூஸ்டர் டோஸும் போட்டுக் கொண்டதால் மூன்றாவது அலையையும் கடந்துவிடலாம் என நம்பினேன். கரோனா எல்லா கவசங்களையும் உடைக்கும் ஆற்றல் பெற்றதாக உள்ளது. குளிர் காய்ச்சல், உடம்பு வலி, சோர்வு இதைத்தவிர வேறு தொந்தரவு இல்லை. ஆக்சிஜன் லெவல் 98. ரத்த அழுத்தமும் இயல்பாகத்தான் இருக்கிறது. ஒருவாரத்தில் சரியாகி விடும். என் மீது அக்கறையும், அன்பும் காட்டும் தோழர்களுக்கு நன்றி!’ என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in