என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்: கரோனா பாதித்த கர்நாடக முதல்வர் ட்விட்

என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்: கரோனா பாதித்த கர்நாடக முதல்வர் ட்விட்

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,” எனக்கு லேசான அறிகுறிகள் இருந்ததை அடுத்து கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள், தயவுசெய்து உங்களைத் தனிமைப்படுத்தி, உங்களைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள். இதனால், எனது டெல்லி பயணம் ரத்து செய்யப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மாலை மற்றும் நாளை தேசியக் குழுவின் மூன்றாவது கூட்டத்திலும், நிதி ஆயோக்கின் ஆட்சி மன்றக் குழுக் கூட்டத்திலும் பங்கேற்க பொம்மை இன்று டெல்லி செல்ல இருந்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in