
பாரத் ஜோடோ யாத்திரையின் போது பேசிய ராகுல் காந்தி, “பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்று கேள்விப்பட்டேன்” என்று தெரிவித்த கருத்து தொடர்பாக, தகவல்களை சேகரிக்க டெல்லி காவல்துறையின் உயர் அதிகாரிகள் இன்று அவரது இல்லத்திற்கு வந்தனர்.
ஸ்ரீநகரில் பாரத் ஜோடோ யாத்திரையின் போது ராகுல் காந்தி, “பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்று கேள்விப்பட்டேன்” என்று கூறினார். இந்தச் சூழலில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக அணுகிய பெண்களின் விவரங்களைக் கேட்டு மார்ச் 16ம் தேதி காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு போலீஸார் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். சமூக வலைத்தள பதிவுகளை கவனத்தில் கொண்டு, ராகுல் காந்திக்கு போலீஸார் நோட்டீசை அனுப்பியுள்ளனர். இதற்கு அவர் இன்னும் பதிலளிக்கவில்லை.
டெல்லி போலீசார் அந்த பெண்களின் விவரங்களை ராகுல் காந்தியிடமிருந்து தெரிந்து கொள்ள விரும்புகின்றனர், இதனால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகள், சிறப்பு போலீஸ் கமிஷனர் நிலை அதிகாரியுடன், சம்பந்தப்பட்ட பெண்களைப் பற்றிய தகவல்களைப் பெற ராகுல் காந்தியின் இல்லத்திற்கு இன்று வந்துள்ளனர்.
ராகுல் காந்திக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்டதற்கு எந்த சட்ட முன்னுதாரணமும் இல்லை என்று காங்கிரஸ் உயர்மட்ட வட்டாரங்கள் கூறுகின்றன."ஒரு தகவல் இருக்கலாம், ஆனால் அவர்களால் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளியிடும்படி அவரை வற்புறுத்த முடியாது. இந்த நடவடிக்கை தீங்கிழைக்கும் செயல்" என்று காங்கிரஸ் கூறியுள்ளது. அவர் விவரங்களைத் தெரிவிக்கத் தவறினால், அவருக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்படும் என்று டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.