அடுத்த அதிர்ச்சி... நாடாளுமன்ற ஊழியர்களின் புதிய சீருடையில் தாமரை சின்னம்!

அடுத்த அதிர்ச்சி... நாடாளுமன்ற ஊழியர்களின் புதிய சீருடையில் தாமரை சின்னம்!

புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தாமரை அச்சிடப்பட்ட சீருடை வழங்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வரும் 18ம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெற உள்ளது. முதல் நாள் பழைய நாடாளுமன்றத்திலும், அதைத்தொடர்ந்து புதிய நாடாளுமன்றத்திலும் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.

இந்நிலையில், புதிய கட்டிடத்திற்கு மாறும்பொழுது அங்கு பணிபுரியம் ஊழியர்களுக்கு தாமரை அச்சிடப்பட்ட சீருடை வழங்கப்பட உள்ளது. இதனை தேசிய ஆடை அலங்கார தொழில்நுட்ப நிறுவனம் வடிவமைத்துள்ளது.

ஆண் ஊழியர்களுக்கு இளஞ்சிவப்பு நிற சட்டையும், காக்கி நிற பேண்ட்டும் சீருடையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. சட்டை முழுவதும் தாமரை படங்கள் இடம்பெற்றுள்ளன. சபை காவலர்களுக்கு சீருடையுடன் மணிப்பூர் தலைப்பாகையும் உண்டு.

பெண் ஊழியர்களுக்கு சீருடையாக சேலை வழங்கப்பட்டுள்ளது. தாமரை நமது நாட்டின் தேசிய மலர் என்றாலும்கூட, அது பா.ஜ.க கட்சியின் சின்னம் என்பதால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றம், கட்சிகளுக்கு அப்பாற்பட்டது, ஆனால் அதை பாஜக தங்கள் சொத்தாக மாற்றுகிறது என்று குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், மலிவாக நடந்து கொள்ளும் பாஜகவினரின் செயலை சபாநாயகர் கவனிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in