உட்கட்சி தேர்தலில் மனு நிராகரிக்கப்பட்டதால் திமுக தொண்டர் தற்கொலை முயற்சி!

திமுக அலுவலகம்
திமுக அலுவலகம்

திமுகவில் உட்கட்சி தேர்தல் நடைபெற்றுவருகிறது. இதில் நெல்லை கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வேட்பாளர்கள் இருதரப்புக்கு இடையே நேற்று மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திமுகவில் திருநெல்வேலி கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட பாளையங்கோட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் பதவிக்கு இருவர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் அதில் தனது வேட்புமனுவை தள்ளுபடி செய்துவிட்டு, போட்டியின்றி மற்றொருவரை வெற்றிபெறவைக்கத் திட்டமிட்டதாகக் கூறி காளி என்பவர் குற்றச்சாட்டைக் கிளப்பினார். நெல்லை கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் கட்சி நிர்வாகிகளிடம், அவர் தேர்தலை நியாயமான முறையில் நடத்தவேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

அந்தக் கோரிக்கைக் குறித்து தலைமையின் கவனத்தை ஈர்க்கும்வகையில் காளி தற்கொலைக்கும் முயன்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காளி, "நான் கட்சிக்காக பல தியாகங்கள் செய்துள்ளேன். போராட்டங்களில் பங்கெடுத்திருக்கிறேன். எனக்கு ஒன்றிய செயலாளர் பதவிகேட்டு மனுசெய்தேன். ஆனால் அது நிராகரிக்கப்பட்டுவிட்டதாக தலைமை சொல்கிறது. எனக்கு 80 சதவீத வாக்குகள் இருக்கிறது. தலைமை தேர்தல் நடத்த வேண்டும். தேர்தல் நடத்தினால் எனக்கு வாக்களிக்க தொண்டர்கள் தயாராக உள்ளார்கள். தலைமை தேர்தல் நடத்தாவிட்டால், என் உழைப்பை அங்கீகரிக்காவிட்டால் எனக்குத் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறுவழியில்லை. இப்போதே முயன்றேன். கட்சியினர் தடுத்துவிட்டனர்.

தேர்தல் நடத்தும் கட்சி நிர்வாகி தலைமையிடம் முறையிட அறிவுரையுறுத்தியதால் இப்போது கட்சி அலுவலகத்தில் இருந்து வெளியேறியிருக்கிறேன். 40 ஆண்டுகால தியாகத்திற்கு உரிய அங்கீகாரம் தரவேண்டும் "என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in