`90 சதவீத வட மாநில தொழிலாளர்கள் வெளியேறுவதால் கட்டுமான தொழில் முடங்கியுள்ளது'

கட்டுமான பொறியாளர் சங்க நிர்வாகிகள் வேதனை
கட்டுமான சங்கத்தலைவர் சீனிவாசன்
கட்டுமான சங்கத்தலைவர் சீனிவாசன்வட மாநில தொழிலாளர்கள் வெளியேறுவதால், கட்டுமான தொழில் முடங்கியுள்ளது - கட்டுமான பொறியாளர் சங்க நிர்வாகிகள் வேதனை!

’’கடந்த 10 நாட்களில் வட மாநில தொழிலாளர்களுக்கு தீங்கு நடக்கிறது என தவறான வதந்திகள் கொண்ட வீடியோக்கள் பரவிவருகிறது. இதனால் கட்டுமான பணியில் இருக்கும் 90 சதவீத தொழிலாளர்கள் வேலையைவிட்டு வெளியேறி வருகிறார்கள்’’ என கட்டுமான பொறியாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 

தமிழகத்தில் இருந்து வட மாநில தொழிலாளர்கள் அதிக அளவில் வெளியேறி வருவதால், பல்வேறு தொழில்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் சென்னை கட்டுமான பொறியாளர் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், ’’கடந்த 10 நாட்களில் வட மாநில தொழிலாளர்களை தாக்குவது போன்ற தவறான வதந்திகள் கொண்ட வீடியோக்கள் பரவி வருகிறது. இதனால் அச்சமடைந்த அவர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பி செல்கின்றனர். இந்த நிலையில் கட்டுமான பணியில் இருக்கும் 90 சதவீத தொழிலாளர்கள் வேலையைவிட்டு வெளியேறி வருகிறார்கள்.

கட்டுமான தொழிலைப் பொறுத்தவரை தற்போது வட மாநில தொழிளாலர்களின் தேவை அதிகமாய் இருக்கிறது. கடந்த 10 நாட்களாக தொழில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. இங்கு உள்ள இளைஞர்கள் கட்டுமான தொழில்களில் பணிபுரிய விரும்புவதில்லை. வட மாநில தொழிலாளர்கள் வெளியேறுவதால் கட்டுமானம் மட்டும் இல்லாமல் அதை சார்ந்துள்ள பல தொழில்கள் பாதிக்கப்படுகிறது.

வட மாநில தொழிலாளர்கள் நமது வளர்ச்சிக்கு முக்கிய பங்கு ஆற்றுகின்றனர். தமிழக அரசு இது தொடர்பாக சிறப்பாக பணியாற்றி வருகின்றது. வட மாநில தொழிலாளர்களை நகையாடும் நோக்குடன் இணையதளத்தில் சில வீடியோக்கள் வெளியாகிறது. அதன் தாக்கம் தற்போது தான் வெளிவரத் தொடங்கியுள்ளது.

வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் அவர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளனர்’’ என்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in