பிரதமர் மோடியை கொல்ல சதித்திட்டம்: பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மீது அமலாக்கத்துறை பகீர் புகார்

பிரதமர் மோடியை கொல்ல சதித்திட்டம்: பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மீது அமலாக்கத்துறை பகீர் புகார்

பிரதமர் நரேந்திர மோடியை பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக அமலாக்கத்துறை கூறியிருப்பது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆட்கள் சேர்ப்பது, நிதி திரட்டுவது உள்ளிட்ட குற்றச்சாட்டு காரணமாக நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மற்றும் எஸ்டிபிஐ கட்சி அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று முன்தினம் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர். அப்போது, 160க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த சோதனையின்போது தமிழகத்தில் 10 பேர், கேரளாவில் 5 பேர் உட்பட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே என்ஐஏ நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் நேற்று நடந்த முழு அடைப்பு போராட்டத்தில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. 70க்கும் மேற்பட்ட பேருந்துகள் சேதம் அடைந்தன. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர்.

இந்நிலையில் அமலாக்கத்துறை அதிர்ச்சி தகவலை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் சதித்திட்டம் தீட்டியதாக அமலாக்கத்துறை கூறி இருக்கிறது. கேரளாவில் கைதான சாதிக் என்பவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தினர். அப்போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. நீதிமன்றத்தில் இது தொடர்பாக அமலாக்கத்துறை தாக்கல் செய்த அறிக்கையில், கடந்த ஜூலை மாதம் 12-ம் தேதி பாட்னாவில் நடந்த பொதுக்கூட்டத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி கொல்ல பாப்புலர் ஃப்ரன்ட் ஆப் இந்தியா அமைப்பு சதித்திட்டம் தீட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆட்களை சேர்த்தல், ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்களை சேகரித்து உத்தரபிரதேசத்தில் பல இடங்களிலும், முக்கிய பிரமுகர்களின் வீடுகளிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாகவும் அமலாக்கத்துறை பகீர் தகவலை தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in