‘அர்விந்த் கேஜ்ரிவாலைக் கொல்ல சதி’ - பாஜக எம்.பி மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

‘அர்விந்த் கேஜ்ரிவாலைக் கொல்ல சதி’ - பாஜக எம்.பி மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை கொல்ல சதித்திட்டம் தீட்டியதில் பாஜக எம்.பி மனோஜ் திவாரிக்கு பங்கு இருப்பதாகவும், அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லி உள்ளாட்சித் தேர்தல் மற்றும் குஜராத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியிடம் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் கேஜ்ரிவாலைக் கொல்ல பாஜக சதி செய்வதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டியுள்ளார். இந்த சதித்திட்டத்தில் பாஜக எம்.பி மனோஜ் திவாரிக்கு பங்கு இருப்பதாகவும், அவரைக் கைது செய்யுமாறும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள சிசோடியா, "அர்விந்த் கேஜ்ரிவாலைக் கொல்ல திட்டமிடப்பட்ட சதியை அவரது மொழி காட்டிக்கொடுக்கிறது. இந்த மிரட்டலுக்காக மனோஜ் திவாரியை கைது செய்ய வேண்டும் என்றும் நாங்கள் கோருகிறோம். கேஜ்ரிவாலைத் தாக்குமாறு தனது குண்டர்களை வெளிப்படையாகக் கேட்டுக்கொள்கிறார், அவர் முழுமையான திட்டமிடலைச் செய்துள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.

சிசோடியாவின் இந்த குற்றச்சாட்டை மனோஜ் திவாரி நிராகரித்தார். "கேஜ்ரிவாலைக் கொல்ல பாஜக சதி செய்கிறது என்னும் பழைய ஸ்கிரிப்டை சிசோடியா படித்து வருகிறார்” என தெரிவித்தார்

முன்னதாக கேஜ்ரிவாலின் பாதுகாப்பு குறித்து விமர்சனம் செய்த மனோஜ் திவாரியின் ட்வீட்டில், "அர்விந்த் கேஜ்ரிவாலின் பாதுகாப்பு குறித்து நான் கவலைப்படுகிறேன். ஏனென்றால் ஆம் ஆத்மியின் ஊழல், மாநகராட்சி தேர்தலுக்கான டிக்கெட்டுகளை விற்பது, பாலியல் வன்கொடுமை செய்தவர்களுடன் நட்பு மற்றும் சிறையில் மசாஜ் செய்தல் போன்றவற்றால் மக்கள் கோபமடைந்துள்ளனர். அவர்களின் எம்எல்ஏக்களும் தாக்கப்பட்டுள்ளனர். இது டெல்லி முதலமைச்சருக்கும் நடக்கக் கூடாது" என்று கூறியிருந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in