`இரு அணிகளுக்கும் ஒப்புதல் படிவம் வழங்கப்படும்; தென்னரசு தான் வேட்பாளர்'- தமிழ்மகன் உசேன் அறிவிப்பு

தமிழ்மகன் உசேன்
தமிழ்மகன் உசேன்இரு அணிகளுக்கும் ஒப்புதல் படிவம் வழங்கப்படும்; தென்னரசு தான் வேட்பாளர் - தமிழ்மகன் உசேன் அறிவிப்பு

’’உச்சநீதிமன்றத்தின் வழிக்காட்டுதலின் படி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் பெறும் படிவம் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இரு அணிகளுக்குமே வழங்கப்படும். ஆனால் ஈபிஎஸ் தரப்பால் அறிவிக்கப்பட்ட தென்னரசு தான் வேட்பாளர்’’ என அதிமுகவின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தெரிவித்துள்ளார்.

அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் பொதுக்குழு உறுப்பினர்களுக்கான ஒப்புதல் படிவத்தை வெளியிட்டார். அதில் அதிமுக வேட்பாளராக தென்னரசு பெயர் இடம் பெற்றுள்ளது.

மேலும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒப்புதல் படிவம் வழங்கப்பட்டு நாளை இரவுக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை தவிர பிற மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மூலம் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு படிவம் வழங்கப்படும் என்றும் உறுப்பினர்களின் வேட்பாளர் ஒப்புதல் படிவம் திங்களன்று தேர்தல் ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைக்குள் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் படிவம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், நாளைக்குள் கையெழுத்திட்டு இரவு 7 மணிக்குள் அனுப்பும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ்மகன் உசேன் தெரிவித்துள்ளார்.

தென்னரசை வேட்பாளராக முன்மொழிந்ததன் மூலம், அதிமுகவின் வேட்பாளர் தென்னரசு என்று தமிழ்மகன் உசேன் உறுதி செய்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in