மேகாலயா முதல்வராக கான்ராட் சங்மா மார்ச் 7ம் தேதி பதவியேற்கிறார்: பிரதமர் மோடி பங்கேற்கிறார்!

கான்ராட் சங்மா
கான்ராட் சங்மாமேகாலயா முதல்வராக கான்ராட் சங்மா மார்ச் 7ம் தேதி பதவியேற்கிறார்: பிரதமர் மோடி பங்கேற்கிறார்!

மேகாலயாவின் முதல்வராக கான்ராட் சங்மா 2வது முறையாக வரும் செவ்வாய்க்கிழமை பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேசிய மக்கள் கட்சியின் தலைவர் கான்ராட் சங்மா இன்று மேகாலயா ஆளுநர் பாகு சவுகானை சந்தித்து வடகிழக்கு மாநிலத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

60 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் தனக்கு 32 எம்.எல்.ஏ.க்களுடன் முழுமையான பெரும்பான்மை இருப்பதாக தெரிவித்துள்ள கான்ராட் சங்மா, ஆதரவளிக்கும் கட்சிகளின் விவரங்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டார். ராஜ் பவனுக்கு செல்வதற்கு முன் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சங்மா, "எங்களுக்கு அறுதிப் பெரும்பான்மை உள்ளது. பாஜக ஏற்கனவே தனது ஆதரவை வழங்கியுள்ளது. மேலும் சிலரும் ஆதரவு அளித்துள்ளனர்" என்றார்.

நேற்று மேகாலயாவில் வெளியான தேர்தல் முடிவுகளில் என்பிபி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பிப்ரவரி 27 அன்று தேர்தல் நடந்த 59 தொகுதிகளில் என்பிபி கட்சி 26 இடங்களை கைப்பற்றியது. முந்தைய கான்ராட் சங்மா அரசாங்கத்தில் என்பிபியின் கூட்டாளியாக இருந்த யுடிபி 11 தொகுதிகளில் வெற்றி பெற்று இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. 2018 தேர்தலில் ஆறு இடங்களில் மட்டுமே இக்கட்சி வெற்றி பெற்றிருந்தது. காங்கிரஸ் மற்றும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் தலா 5 இடங்களிலும், பாஜக 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. வாய்ஸ் ஆப் தி பீப்பிள் பார்ட்டி 4 தொகுதிகளிலும், பிடிஎப் 2 தொகுதிகளிலும், ஹில் ஸ்டேட் பீப்பிள் டெமாக்கரட்டிக் பார்ட்டி 2 தொகுதிகளிலும், சுயேட்சைகள் 2 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in