சுகேஷ் சந்திரசேகர் எப்போது வேண்டுமானாலும் பாஜகவில் சேருவார்: அர்விந்த் கேஜ்ரிவால் பரபரப்பு

அர்விந்த் கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால்

பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் இனி எந்த நாளிலும் பாஜகவில் சேருவார் என டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அர்விந்த் கேஜ்ரிவால், “ சுகேஷ் சந்திரசேகர் பாஜகவின் மொழியைப் பேசக் கற்றுக் கொண்டிருக்கிறார். அவர் தற்போது பாஜகவில் சேர பயிற்சி பெற்று வருகிறார். அவர் எந்த நாளிலும் பாஜகவில் இணைவார். சுகேஷை பாஜகவின் நட்சத்திரப் பிரச்சாரகராக ஆக்க வேண்டும். குறைந்தபட்சம் அவரது கதைகளைக் கேட்கவாவது மக்கள் பாஜக பேரணிகளின் போது வருவார்கள். அப்படியாவது பாஜக பேரணிகளின் போது கூட்டம் இருக்கும். எனவே, அவர்கள் அவரைத் தேர்ந்தெடுத்து கட்சித் தலைவராக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சுகேஷ் சந்திரசேகர் நேற்று ஊடகங்களுக்கு அனுப்பிய கடிதத்தில், "அமெரிக்க செய்திகளில் டெல்லி அரசின் பள்ளி மாதிரி குறித்து விளம்பரப்படுத்துவதற்காக விளம்பர செலவுக்கு 8.5 லட்சம் டாலர் மற்றும் 15 சதவீதம் கூடுதல் கமிஷன் வழங்கப்பட்டது" என்று குற்றம் சாட்டினார். இந்த நிலையில் அர்விந்த் கேஜ்ரிவால் சுகேஷ் மீது கடுமையான தாக்குதலை தொடுத்துள்ளார்

இதற்கு முன்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு ‘பாதுகாப்பு பணமாக’ ரூ.10 கோடி கொடுத்ததாக டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கு சுகேஷ் கடிதம் எழுதியிருந்தார். தென்னிந்தியாவில் ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பினை வழங்குவதாகக் கூறி தன்னிடமிருந்து சத்யேந்திர ஜெயின் 50 கோடி ரூபாயை பெற்றுக்கொண்டார் எனவும், ரூ.500 கோடி நிதி திரட்டி தருமாறு கேஜ்ரிவால் கோரிக்கை வைத்ததாகவும் சுகேஷ் தனது கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in