5 மாநிலங்களில் இடைத்தேர்தல்: 3ல் காங்கிரஸ் அபார வெற்றி - 2ல் ஜெயித்தது பாஜக!

காங்கிரஸ்
காங்கிரஸ்மகாராஷ்ட்டிரா, மேற்கு வங்க இடைத்தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி: பாஜக ஒரு தொகுதியில் வெற்றி

மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உட்பட 5 மாநிலங்களின் 6 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது. இதில் 3 தொகுதிகளில் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றுள்ளது. ஒரு தொகுதியை பாஜக வென்றுள்ளது.

மகாராஷ்டிராவில் 2 தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது. இதில் கஸ்பா பெத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தங்கேகர் ரவீந்திர ஹேம்ராஜ், பாஜக வேட்பாளராய் 10,915 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த தொகுதியில் பாஜக 1980 முதல் தொடர்ச்சியாக வெற்றிபெற்று வருகிறது. மற்றொரு தொகுதியான சிஞ்ச்வாத்தில் பாஜக வேட்பாளர் அஸ்வினி லஷ்மண் ஜக்டாப், என்சிபி வேட்பாளரை 36,168 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த தொகுதியில் உத்தவ் தாக்கரே சிவசேனா மீது அதிருப்தியில் சுயேட்சையாக போட்டியிட்ட ராகுல் கலாட்டே40,075 வாக்குகள் பெற்றார்.

இடைத்தேர்தல் நடைபெற்ற மேற்கு வங்கத்தின் சாகர்திகி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பைரான் பிஸ்வாஸ், திரிணமூல் வேட்பாளரை 22,986 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அதேபோல ஜார்க்கண்டின் ராம்கர் தொகுதியில் ஏஜேஎஸ்யு கட்சியின் வேட்பாளர் சுனிதா சௌத்ரி, காங்கிரஸ் வேட்பாளரை 21, 970 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இடைத்தேர்தல் நடந்த அருணாச்சல பிரதேசத்தின் லும்லா தொகுதியில் பாஜக வேட்பாளர் மேரால்பார்ன் சையீம் போட்டியின்றி தேர்வானார். தமிழகத்தின் ஈரோடு கிழக்குத் தொகுதியில், காங்கிரஸ் அதிமுகவை வீழ்த்தியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in