'குறித்து வைக்கவும்... பாஜகவை காங்கிரஸ் கட்சி வீழ்த்தும்' - ராகுல் காந்தி உறுதி

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

என் வார்த்தைகளை குறித்து வைக்கவும், பாரதிய ஜனதாவை காங்கிரஸ் கட்சி வீழ்த்தும் என்று பாரத் ஜோடோ யாத்திரையின் போது ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் நடைபெற்று வரும் பாரத் ஜோடோ யாத்திரையின் நூறாவது நாள் நிகழ்ச்சியில், ஜெய்ப்பூரில் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "காங்கிரஸுக்குள் சர்வாதிகாரம் இல்லை, காங்கிரஸ் கட்சி பாசிஸ்ட் இல்லை. காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் ஈடுசெய்ய முடியாததாகவும், இணையற்றதாகவும் இருக்கும். என் வார்த்தைகளை குறித்து வைக்கவும், பாரதிய ஜனதாவை காங்கிரஸ் கட்சி வீழ்த்தும்” என்று கூறினார்.

மேலும், "எங்கள் கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை, எங்கள் கட்சியில் சில நேரங்களில் இதுபோன்ற விஷயங்கள் நடக்கும், ஆனால் அதனால் எந்த பிரச்சினையும் இல்லை. தனிப்பட்ட முறையில் எனக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் எதிராக திட்டமிட்ட அவதூறு பிரச்சாரம் செய்யப்படுகிறது. காங்கிரஸ் கட்சி அழிந்து வருகிறது என்ற எண்ணம் பா.ஜ.க.வால் பரப்பப்படுகிறது. காங்கிரஸ் ஒரு கருத்தியல் கட்சி, அது பாசிசத்திற்கு எதிராக உறுதியாக நிற்கிறது" என்றார்

யாத்திரையை தொடங்குவதற்கு முன், நாடு முழுவதும் உள்ள பகைமை மற்றும் வெறுப்பு பற்றி அச்சமடைந்ததாகவும், ஆனால் பாத யாத்திரையின் நூறாவது நாளில், தேசத்தில் மகத்தான மரியாதை, சகோதரத்துவம் மற்றும் அன்பு இருப்பதாக தான் நம்புவதாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in