காங்கிரஸுக்கு முஸ்லிம் வாக்குகள் வேண்டும்; ஆனால் முஸ்லிமை வேட்பாளராக்க மாட்டார்களா? -வெடித்தது புதிய சர்ச்சை

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் கூட்டணியில் ஒரு காங்கிரஸ் வேட்பாளர் கூட நிறுத்தப்படாததால் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ் கட்சி, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி, ஒரு முஸ்லீம் வேட்பாளரைக் கூட நிறுத்தாததால், காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரக் குழுவில் இருந்து அதன் மூத்த தலைவரான முகமது ஆரிப் நசீம் கான் ராஜினாமா செய்துள்ளார்.

மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்
மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்

இதனை, ’இந்தியா கூட்டணிக்குள் அடுத்த சண்டை மூண்டிருக்கிறது’ என மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான கிரிராஜ் சிங் கிண்டல் செய்துள்ளார். “முஸ்லிம்களின் அனைத்து வாக்குகளையும் பெறுவோம் என்று காங்கிரஸ் நம்பும் போது, ​​ஏன் அவர்களுக்கு சீட்டு கொடுக்கவில்லை? இது இந்தியா கூட்டணிக்குள் அடுத்த சண்டையாகி இருக்கிறது” என்று கிரிராஜ் சிங் சீண்டியுள்ளார்.

மகாராஷ்டிரா மக்களவைத் தொகுதிகளில் எதிலும் முஸ்லீம்களுக்கு சீட்டு கிடைக்காததால் கோபமடைந்த நசீம் கான், கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு எழுதிய கடிதத்தில், இந்த தேர்தலில் தான் பிரச்சாரம் செய்யப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். மற்றபடி கட்சிக்கு எதிரான கலகத்தில் விருப்பமில்லை எனவும் செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

”மகாராஷ்டிராவின் மொத்தமுள்ள 48 இடங்களில், மகாராஷ்டிராவில் ஒரு முஸ்லீம் வேட்பாளரைக் கூட மகா விகாஸ் அகாடி பரிந்துரைக்கவில்லை" என்று அந்த கடிதத்தில் நசீன் கான் வேதனை தெரிவித்திருக்கிறார். மகாராஷ்டிராவில் உள்ள பல முஸ்லீம் அமைப்புகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் காங்கிரஸில் குறைந்தது ஒரு முஸ்லிம் வேட்பாளரையாவது நிறுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள், ஆனால் துரதிர்ஷ்டவசமாக கட்சி ஒரு முஸ்லீம் வேட்பாளரைக் கூட பரிந்துரைக்கவில்லை என்றும் நசீம் கான் கூறினார்.

நசீம் கான்
நசீம் கான்

“மகாராஷ்டிராவில் உள்ள முஸ்லீம்கள் மற்றும் முஸ்லிம் அமைப்புகளுக்கு என்னிடம் பதில் இல்லை. எனவே, மக்களவை தேர்தலுக்கான கட்சியின் பிரச்சாரக் குழுவில் இருந்து ராஜினாமா செய்கிறேன்” என்று அவர் தெரிவித்தார். காங்கிரஸ் இடம்பெற்றிருக்கும் மகா விகாஸ் அகாதி கூட்டணியில், 2024 மக்களவைத் தேர்தலுக்கான சீட் பகிர்வு ஏற்பாட்டின்படி, சிவசேனா (உத்தவ்) 21 இடங்களிலும், காங்கிரஸ் 17 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத்பவார்) 10 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

இதையும் வாசிக்கலாமே...

தீவிரவாதிகள் தாக்குதலில் 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் மரணம்; 6 பேர் படுகாயம்

மார்க் நெக்ஸ்ட்... ஸ்கில்ஸ் ஃபர்ஸ்ட்... பள்ளி மாணவர்களுக்கான டிப்ஸ்!

பீகாரில் இருந்து உ.பி.,க்கு 95 குழந்தைகள் கடத்தல்? - அதிரடியாக மீட்ட குழந்தைகள் நல ஆணையம்!

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டம்... அமெரிக்காவில் கோவை மாணவி கைது!

சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட வழக்கு... போர்ச்சுகல் நாட்டில் அன்மோல் பிஷ்னோய் பதுங்கலா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in