ஈரோடு இடைத்தேர்தல் கருத்துக்கணிப்பு: காங்கிரஸ் 39.5% வாக்குகள் பெற்று வெற்றி பெறும்

இளம் வாக்காளர்கள் மத்தியில் நாம் தமிழர் முதலிடம்
பேராசிரியர் ராஜநாயகம் மற்றும் மக்கள் ஆய்வு மைய நிர்வாகி
பேராசிரியர் ராஜநாயகம் மற்றும் மக்கள் ஆய்வு மைய நிர்வாகிஈரோடு இடைத்தேர்தல் கருத்துக்கணிப்பு: காங்கிரஸ் 39.5% வாக்குகள் பெற்று வெற்றி பெறும்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்வைத்து பேராசிரியர் ராஜநாயகத்தின் மக்கள் ஆய்வு மையம் நடத்திய கருத்துக்கணிப்பில் திமுக தலைமையிலான காங்கிரஸ் கட்சி வேட்பாளர் 39.5 முதல் 65.0 சதவீதம் வரையிலான வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் ஆய்வு மையம் கருத்துக்கணிப்பு முடிவுகள்
மக்கள் ஆய்வு மையம் கருத்துக்கணிப்பு முடிவுகள்ஈரோடு இடைத்தேர்தல் கருத்துக்கணிப்பு: காங்கிரஸ் 39.5% வாக்குகள் பெற்று வெற்றி பெறும்
மக்கள் ஆய்வு மையம் கருத்துக்கணிப்பு முடிவுகள்
மக்கள் ஆய்வு மையம் கருத்துக்கணிப்பு முடிவுகள்ஈரோடு இடைத்தேர்தல் கருத்துக்கணிப்பு: காங்கிரஸ் 39.5% வாக்குகள் பெற்று வெற்றி பெறும்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்வைத்து பேராசிரியர் ராஜநாயகத்தின் மக்கள் ஆய்வு மையம் நடத்திய கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன் வெற்றி பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக கூட்டணியில் இருந்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன் 39.5 முதல் 65.0 சதவீத வாக்குகளைப் பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது.

அதிமுக வேட்பாளர் தென்னரசு 24.5 முதல் 41 சதவீத வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளதாகவும், நாம் தமிழர் கட்சியின் மேனகா  9.5 முதல் 17 சதவீத வாக்குகளைப் பெறுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், தேமுதிக, நோட்டா மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் இணைந்து 5 சதவீத வாக்குகளைப் பெறுவார்கள் என்றும் முடிவுகள் கூறுகின்றன.

முதல் வாக்காளர் உள்ளிட்ட 21 வயதுக்குக் கீழ்ப்பட்ட இளம் வாக்காளர்கள் பெரும்பாலும் நாம்தமிழர் கட்சிக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிமுக ஈபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் தனித்தனிச் சின்னங்களில் நின்றிருந்தால் நாம்தமிழர் கட்சி இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கும் என முடிவுகள் கூறுகின்றன. ஈரோடு கிழக்கில் அதிகளவில் பணம் விநியோகம் நடைபெறுகிறது. மக்கள் எந்தவிதமான குற்ற உணர்ச்சியும் இல்லாமல் வாங்கிக் கொள்கிறார்கள் என மக்கள் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in