காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம்
காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம்

ராஜஸ்தான், சத்தீஸ்கர், ம.பி., காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று இறுதியாகலாம்!

5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வேட்பாளர்களை இறுதி செய்வது குறித்து காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்று வருகிறது.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. சத்தீஸ்கரில் 2 கட்டமாகவும், பிற 4 மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெறுகிறது. டிசம்பர் 3ம் தேதி, 5 மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் தற்போது காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. மத்திய பிரதேசத்தில் பாஜகவும், தெலங்கானாவில பாரத் ராஷ்டிர சமிதி கட்சியும், மிசோரமில் மிசோ தேசிய முன்னணியும் ஆட்சியில் உள்ளது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூட்டத்திற்கு வருகை
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூட்டத்திற்கு வருகை

இந்த தேர்தலில் பாஜக காங்கிரஸ் ஆகிய கட்சிகள் நேரடியாக களமிறங்குவதால் தேர்தல் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. இதனிடையே தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிக்கும் பணிகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

காங்கிரஸ் சார்பில் ஏற்கெனவே முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இறுதி வேட்பாளர் பட்டியலை முடிவு செய்வதற்கான ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி
மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி

இதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் டெல்லியில் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர் சோனியா காந்தி, கமல்நாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in