2024ல் பாஜகவை தோற்கடிக்கும் நோக்கம் கொண்ட கட்சிகளுடன் கூட்டணி: காங்கிரஸ் தலைவர் கார்கே நம்பிக்கை

மல்லிகார்ஜுன கார்கே
மல்லிகார்ஜுன கார்கே2024ல் பாஜகவை தோற்கடிக்கும் நோக்கம் கொண்ட கட்சிகளுடன் கூட்டணி: காங்கிரஸ் தலைவர் கார்கே நம்பிக்கை

2024 லோக்சபா தேர்தலில் மக்கள் விரோத பாஜக அரசை தோற்கடிக்க, ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளுடன் இணைந்து, சாத்தியமான கூட்டணியை உருவாக்குவோம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெறும் காங்கிரஸின் 85-வது மாநாட்டில் உரையாற்றிய மல்லிகார்ஜுன கார்கே, “அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக விழுமியங்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள், சீன எல்லையில் தேசிய பாதுகாப்பு பிரச்சினைகள், எப்போதும் இல்லாத அளவிலான பணவீக்கம் மற்றும் கடுமையான வேலையின்மை போன்ற சவால்களை நாடு எதிர்கொள்கிறது. நாடு தற்போதுள்ள இக்கட்டான சூழ்நிலையில், திறமையான மற்றும் தீர்க்கமான தலைமையை வழங்கக்கூடிய ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே.

2004 முதல் 2014 வரை, ஒரே எண்ணம் கொண்ட கட்சிகளுடன் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி நாட்டு மக்களுக்கு சேவை செய்தது. எனவே இப்போது மக்கள் விரோத மற்றும் ஜனநாயக விரோத பாஜக அரசை தோற்கடிக்க ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் இணைந்து சாத்தியமான கூட்டணியை உருவாக்குவதை நாங்கள் மீண்டும் எதிர்நோக்குகிறோம்" என்று அவர் கூறினார்.

மேலும், “பாஜகவினரின் டிஎன்ஏ ஏழைகளுக்கு எதிரானது. எனவே நாட்டில் நிலவும் சூழ்நிலைக்கு எதிராக மக்கள் இயக்கம் திரள வேண்டும். மக்கள் சேவகர் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் பிரதமர் மோடி தனது நண்பர்களின் நலன்களுக்காக சேவையாற்றுகிறார். இந்தியாவில் ஜனநாயகத்தை அழிக்க சதி நடக்கிறது. ஆனால் காங்கிரஸ் அனைவரையும் ஒன்றிணைக்கும் வகையில் செயல்படுகிறது” என்று கூறினார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in