மேற்கு வங்க மாநிலம் புருலியா தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி
மேற்கு வங்க மாநிலம் புருலியா தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி

‘காங்கிரஸ், திரிணமூல் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பண மூட்டைகள்; ஆனால் நான் எதையும் மறைக்கவில்லை’ பிரதமர் மோடி பிரச்சாரம்

'காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் தலைவர்களிடம் பண மூட்டைகள் உள்ளன. ஆனால் நான் உங்களிடமிருந்து எதையாவது மறைத்திருக்கிறேனா? பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் புருலியாவில் பாஜக சார்பில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்று பேசியதாவது:

திரிணமூல் காங்கிரஸ் ‘மா, மாதி, மனுஷ்’ (தாய், நிலம், மக்கள்) என்ற முழக்கத்தைக் கொடுத்தாலும் அவர்களைப் பாதுகாக்க எதுவும் செய்யவில்லை.

சந்தேஷ்காலி சம்பவம் வங்காள பெண்களை உலுக்கியது. ஷேக் ஷாஜகானை காக்க எஸ்சி, எஸ்டி பெண்களை திரிணமூல் காங்கிரஸ் மனிதாபிமானமற்றதாக்கியுள்ளது.

வங்காள பெண்கள் திரிணமூல் காங்கிரஸ் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர். சந்தேஷ்காலியில் நடந்த பாவம் ஒட்டு மொத்த வங்காள சகோதரிகளையும் சிந்திக்க வைத்துள்ளது

அம்பேத்கர் ஒரு நபரின் நம்பிக்கையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்தார். ஆனால் இப்போது,இந்தியா கூட்டணி, மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க விரும்புகிறது.

கர்நாடகாவில், அவர்கள் ஓபிசி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு அளித்தனர். மேலும் இந்த சதியில் காங்கிரஸை, திரிணமூல் காங்கிரஸ் ஆதரித்தது.

உங்கள் இடஒதுக்கீட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறீர்களா? நீங்கள் திரிணமூல் காங்கிரஸ், காங்கிரஸின் வாக்கு வங்கி அல்ல; எனவே இந்தக் கட்சிகள் உங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை.

காங்கிரஸ், பாஜக, திரிணமூல் காங்கிரஸ்
காங்கிரஸ், பாஜக, திரிணமூல் காங்கிரஸ்

திரிணமூல் காங்கிரஸும், காங்கிரஸ் கட்சியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளில் ஏராளமான பணம் சிக்கியுள்ளது. அதேபோல், திரிணமூல் காங்கிரஸ் தலைவர்களிடமும் பண மூட்டைகள் உள்ளன. அவர்கள் மோடியை திட்டுகிறார்கள். ஆனால் நான் உங்களிடம் எதையும் மறைக்க முயற்சித்திருக்கிறேனா?"

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

x
காமதேனு
kamadenu.hindutamil.in