காங்கிரஸ்தான் உயர்வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டுக்கு அடித்தளம் அமைத்தது: ஜெய்ராம் ரமேஷ் திட்டவட்டம்

ஜெய்ராம் ரமேஷ்
ஜெய்ராம் ரமேஷ்

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு வழங்கப்பட்ட 10 சதவீத இடஒதுக்கீடு செல்லுபடியாகும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு வழங்கப்பட்ட 10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு 3:2 என்ற பெரும்பான்மை அடிப்படையில் 103 வது அரசியலமைப்பு திருத்தம் செல்லுபடியாகும் என்பதை உறுதி செய்தது. 2019ம் ஆண்டு ஜனவரியின் கொண்டுவரப்பட்ட இந்த சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பளித்தது.

இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியலிடப்பட்ட சாதிகள், பழங்குடியினர் அல்லாத பிற சாதிகளைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் 103வது அரசியல் சட்டத் திருத்தத்தை உறுதி செய்யும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை காங்கிரஸ் வரவேற்கிறது. 2005-06ல் டாக்டர் மன்மோகன் சிங்கின் அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட செயல்பாட்டின் விளைவாக, 2010 ஜூலையில் சின்ஹோ கமிஷன் அதன் அறிக்கையை சமர்ப்பித்ததன் மூலம் இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு, பரவலான ஆலோசனைகள் நடத்தப்பட்டு, 2014க்குள் மசோதா தயாராகிவிட்டது. இந்த மசோதாவை நிறைவேற்ற மோடி அரசு ஐந்து வருடங்கள் எடுத்துக் கொண்டது” என தெரிவித்தார்

மேலும், தான் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தபோது, ​​2012ம் ஆண்டுக்குள் சமூக-பொருளாதார மற்றும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு முடிந்துவிட்டதாகவும், புதுப்பிக்கப்பட்ட ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு குறித்த தனது நிலைப்பாட்டை மோடி அரசு இன்னும் தெளிவுபடுத்தவில்லை என்றும் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in