ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ.2500... சோனியா காந்தி அதிரடி அறிவிப்பு

சோனியா காந்தி
சோனியா காந்தி

தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ‘மகாலட்சுமி’ திட்டத்தின் மூலம் பெண்களுக்கு மாதம் ரூ.2500 வழங்கப்படும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார்.

பொதுக்கூட்டத்தில் சோனியா காந்தி
பொதுக்கூட்டத்தில் சோனியா காந்தி

தெலங்கானாவில் ரங்காரெட்டி மாவட்டத்தில் துக்குகுடா நகரில் விஜயபேரி சபாவில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உரையாற்றினார். அக்கூட்டத்தில் அவர், தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், தெலங்கானா மக்களுக்கு 5 உத்தரவாதங்களை வழங்குவதாக அறிவித்தார்.

’மகாலட்சுமி’எனும் திட்டத்தின்படி தெலங்கானாவில் உள்ள பெண்களுக்கு மாதம் ரூ.2500 வழங்கப்படும். சமையல் எரிவாயு ரூ.500 தொகையில் வழங்கப்படும். தெலங்கானா மாநில அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என பல வாக்குறுதிகளை அறிவித்தார்.

மேலும் தெலங்கானாவில் அனைத்து தரப்பு மக்களுக்காகவும் உழைக்க காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும் எனவும் கூறினார். தெலங்கானாவில் தற்போது சந்திரசேகர் ராவ் தலைமையிலான் பாரத் ராஷ்ட்ரிய சமீதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in