மிசோரம் மாநிலத்தில் தனித்து நிற்கும் காங்கிரஸ்... வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பாஜகவை வறுத்தெடுத்த ராகுல்!

மிசோரம் நடைபயணத்தில் ராகுல் காந்தி
மிசோரம் நடைபயணத்தில் ராகுல் காந்தி

மிசோரம் மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தலில் தனித்துப் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி, தனது வேட்பாளர்களின் பட்டியலை இன்று வெளியிட்டது. அதே சூட்டில் பொதுகூட்டத்தில் கலந்துகொண்ட ராகுல் காந்தி, பாஜக மற்றும் பிரதமர் மோடியை வழக்கம்போல வறுத்தெடுத்தார்.

வட கிழக்கு மாநிலமான மிசோரமில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அங்கே இன்று தனது இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை தொடங்கியதை முன்னிட்டு, தனது வேட்பாளர்களின் பட்டியலையும் காங்கிரஸ் வெளியிட்டது.

40 தொகுதிகள் அடங்கிய மிசோரம் மாநிலத்தின் 39 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் இன்று வெளியிட்டது. நவம்பர் 7 அன்று ஒரே கட்டமாக நடைபெறும் வாக்குப்பதிவை அடுத்து டிசம்பர் 3 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.

காங்கிரஸ்
காங்கிரஸ்

வேட்பாளர் பட்டியல் வெளியீட்டைத் தொடர்ந்து ஐஸ்வாலில் 2 கிமீ தூரம் நடைபயணம் வாயிலாக மக்களை சந்தித்த ராகுகாந்தி, பின்னர் ராஜ்பவன் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் “இஸ்ரேலில் என்ன நடக்கிறது என்பதில் ஆர்வம் காட்டும் அளவுக்கு, நமது நாட்டின் மணிப்பூர் மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பதில், பிரதமர் மோடி சிறிதும் அக்கறை காட்டுவது இல்லை. மணிப்பூரில் பெண்கள் துன்புறுத்தப்பட்டனர்; குழந்தைகள் கொல்லப்பட்டனர். இவை எதைப் பற்றியும் பிரதமர் கவலைப்பட வில்லை. அங்கே சென்று பார்வையிடவும் இல்லை" என்றார்.

"பரஸ்பரம் மதிப்பதும், சகிப்புத்தன்மையும், பிறர் கருத்துக்கள், மதங்கள் மற்றும் மொழிகளை நேசிப்பதுமே இந்தியா என்பதை இவர்கள் மாற்ற முயல்கிறார்கள். நமது இந்தியா பாஜகவினரால் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. பாஜகவினர் நாட்டில் வெறுப்பையும் வன்முறையையும் பரப்புகிறார்கள்” என்று தாக்கினார். வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கையோடு உற்சாகமாக தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்திருக்கிறார் ராகுல் காந்தி. மணிப்பூர் விவகாரம் காரணமாக வட கிழக்கில் இழந்த செல்வாக்கை மீட்பது எப்படி என பாஜக திணறி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

பிஎஸ்சி படித்தவர்களுக்கு ரூ.1,40,000 சம்பளத்தில் விமான நிலையத்தில் வேலை!

லீக்கானது ‘லியோ' படத்தின் கதை... படக்குழுவினர் அதிர்ச்சி!

பெற்றோரிடம் ரூ.2 லட்சம் பேரம்; குழந்தையை விற்க முயற்சி- அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்

பிரபஞ்ச அழகிப் போட்டியில் புதுமை... 2 திருநங்கைகள் பங்கேற்பு!

எனக்கு அதைத் திருடுற பழக்கம் இருக்கு... நடிகை கீர்த்தி சுரேஷ்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in