அமேதியில் ராகுல், ரேபரேலியில் பிரியங்கா... அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகிறது

ராகுல் காந்தி - பிரியங்கா காந்தி
ராகுல் காந்தி - பிரியங்கா காந்தி

உத்தரபிரதேசத்தின் அமேதி, ரேபரேலி ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களாக முறையே ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை காங்கிரஸ் கட்சி இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி-யுமான ராகுல் காந்தி மீண்டும் அமேதியில் போட்டியிடலாம் என்ற ஊகங்களுக்கு மத்தியில், அமேதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து விவாதிக்க அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையிலான மத்திய தேர்தல் குழு இன்று கூடுகிறது. இதில் உத்தரபிரதேசத்தில் அமேதி, ரேபரேலி தொகுதிகள் மற்றும் பஞ்சாபில் மீதமுள்ள ஐந்து இடங்களுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.

காங்கிரஸ் வாரிசுகள்: சோனியா - ராகுல் - பிரியங்கா
காங்கிரஸ் வாரிசுகள்: சோனியா - ராகுல் - பிரியங்கா

ரேபரேலி, அமேதி ஆகியவை காங்கிரஸ் தலைவர்களின் ஆஸ்தான தொகுதிகளாகும். ரேபரேலியில் 1967-ம் ஆண்டிலிருந்தும், அமேதியில் 1980 முதலும் நேரு குடும்பத்தினரே பெரும்பாலும் வென்று வந்துள்ளனர். இந்த நிலையில் ரேபரேலி எம்பி-யான சோனியா காந்தி இம்முறை அங்கே போட்டியிடுவதை தவிர்த்திருக்கிறார். வயோதிகத்தை காரணமாக்கி ராஜ்யசபா மூலம் நாடாளுமன்றத்தில் சோனியா காந்தி பிரவேசித்திருக்கிறார். எனவே ரேபரேலியில் இம்முறை பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக தெரிகிறது.

கடந்த தேர்தலில் உ.பி-யின் அமேதி, கேரளத்தின் வயநாடு என 2 தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் மட்டுமே வென்றார். அமேதியில் பாஜகவின் ஸ்மிருதி இரானியிடம் தோல்வி அடைந்தார். இம்முறை ராகுல் அமேதி மக்களை கைவிட்டதாக ஸ்மிருதி இரானி கேலி செய்து வருவதன் மத்தியில், அங்கே ராகுல் போட்டியிடுவாரா என்ற கேள்வி தொடர்ந்தது. ராகுலின் மைத்துனரும் பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா அமேதி வேட்பாளராக வெளிப்படையாக விருப்பம் தெரிவித்தபோதும், காங்கிரஸ் தலைமை வேட்பாளர் அறிவிப்பில் காரணத்தோடு காலம் தாழ்த்தியது.

ராகுல் காந்தி - ஸ்மிருதி இரானி
ராகுல் காந்தி - ஸ்மிருதி இரானி

இதனிடையே 2ம் கட்ட வாக்குப்பதிவாக நேற்றைய தினம் வயநாடு தேர்தல் முடிந்த நிலையில், இன்றைய தினம் அமேதிக்கான வேட்பாளராக ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைமை அறிவிக்கும் எனத் தெரிகிறது. இந்த வகையில் ரேபரேலியில் பிரியங்கா, அமேதியில் ராகுல் ஆகியவற்றுடன் பஞ்சாப்பின் மிச்சமுள்ள சில தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் தலைமை அறிவிக்க உள்ளது. அமேதி தொகுதியில் 2004 முதல், தொடர்ந்து 3 முறை அங்கே ராகுல் காந்தி வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

தீவிரவாதிகள் தாக்குதலில் 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் மரணம்; 6 பேர் படுகாயம்

மார்க் நெக்ஸ்ட்... ஸ்கில்ஸ் ஃபர்ஸ்ட்... பள்ளி மாணவர்களுக்கான டிப்ஸ்!

பீகாரில் இருந்து உ.பி.,க்கு 95 குழந்தைகள் கடத்தல்? - அதிரடியாக மீட்ட குழந்தைகள் நல ஆணையம்!

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டம்... அமெரிக்காவில் கோவை மாணவி கைது!

சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட வழக்கு... போர்ச்சுகல் நாட்டில் அன்மோல் பிஷ்னோய் பதுங்கலா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in