கார்கேவா? சசி தரூரா? - விறுவிறுப்பாக நடைபெறுகிறது காங்கிரஸ் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு!

கார்கேவா? சசி தரூரா? - விறுவிறுப்பாக நடைபெறுகிறது காங்கிரஸ் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு!

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு டெல்லி மற்றும் அனைத்து மாநிலங்களிலும் இன்று நடைபெற்று வருகிறது.

2019ல் காங்கிரஸ் கட்சி இரண்டாவது முறையாக பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்தது. இதனால் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகிய மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தேர்தல் நடத்தப்படுகிறது.

இன்று நடைபெறும் தலைவர் தேர்தலில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு காந்தி குடும்பத்தை சேராத கட்சியின் தலைவரை காங்கிரஸ் தேர்ந்தெடுக்க உள்ளது. கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசி தரூர் ஆகிய இருவரும் இந்த பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

தற்போது கட்சியின் "பாரத் ஜோடோ" யாத்திரையை வழிநடத்தும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைவர் பதவியை ஏற்க உறுதியாக மறுத்துள்ளார். தலைவர்களில் ஒரு பிரிவினரின் ராகுல் காந்தி மீண்டும் தலைவராக வேண்டும் என தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வந்தனர், ஆனால் அவர் மறுத்துவிட்டார். சோனியா காந்தி 2019 ஆகஸ்ட் மாதத்திலிருந்து காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக பதவி வகித்து வருகிறார்

சுதந்திரம் அடைந்ததில் இருந்து காங்கிரஸின் 37-வது தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இன்று அக்கட்சியின் மாநில அலுவலகங்கள் மற்றும் டெல்லியில் உள்ள தலைமையகத்தில் நடைபெறுகிறது. இன்று மாலை 4 மணி வரை நடைபெறவுள்ள இந்த தேர்தலில் வாக்களிக்க சுமார் 10 ஆயிரம் பிரதிநிதிகள் தகுதி பெற்றுள்ளனர்.

இடமிருந்து வலம் - பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, சோனியா காந்தி
இடமிருந்து வலம் - பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, சோனியா காந்திகோப்புப் படம்

கடைசியாக கடந்த 2000 ம் ஆண்டு சோனியா காந்திக்கும் ஜிதேந்திர பிரசாதாவுக்கும் இடையே தேர்தல் நடந்தது. இதில் சோனியா காந்தி மொத்தமுள்ள 7,700 வாக்குகளில் 7,448 பெற்றார், பிரசாதா 94 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

இந்த தேர்தலில் சோனியா காந்தியும், கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் டெல்லி தலைமையகத்தில் வாக்களிக்க உள்ளனர். கர்நாடகாவின் சங்கனக்கல்லுவில் உள்ள கட்சியின் “பாரத் ஜோடோ யாத்ரா” முகாமில் அமைக்கப்பட்டிருக்கும் சிறப்பு வாக்குச் சாவடியில் ராகுல் காந்தி வாக்களிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

கடைசியாக காந்தி அல்லாத காங்கிரஸின் தலைவராக சீதாராம் கேஸரி 1996ம் ஆண்டு முதல் 1998 வரை பதவி வகித்தார். 1998 ல் கட்சித் தலைவராக பதவியேற்ற சோனியா காந்தி 22 ஆண்டுகளாக, நீண்ட காலம் தலைவராக பதவியில் இருந்தார். இந்திரா காந்தி ஏழு ஆண்டுகளும் , ஜவஹர்லால் நேரு எட்டு ஆண்டுகளும் மட்டுமே கட்சிக்கு தலைமை தாங்கினர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in