`ஒன்றுக்கும் பிரயோஜனப்படாத வெறும் காகித புத்தகம்'- புதுச்சேரி பட்ஜெட்டை விமர்சிக்கும் காங்கிரஸ்

`ஒன்றுக்கும் பிரயோஜனப்படாத வெறும் காகித புத்தகம்'- புதுச்சேரி பட்ஜெட்டை விமர்சிக்கும் காங்கிரஸ்

புதுச்சேரி மாநிலத்தில் முதலமைச்சர் ரங்கசாமி இன்று தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் எந்த விதமான புதிய திட்டங்களும், வளர்ச்சித் திட்டங்களும் இடம்பெறவில்லை என்று புதுச்சேரி காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் ஆர்.கே.ஆர்.அனந்தராமன் இது குறித்து கூறுகையில், "புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி இன்று தாக்கல் செய்துள்ள 2022 - 2023 நிதிநிலை அறிக்கையில் எந்தவிதமான ஒரு புதிய திட்டமும் இல்லை. புதுச்சேரி மாநிலத்திற்கான வளர்ச்சி திட்டமும் இடம்பெறவில்லை.

தேர்தல் வாக்குறுதியில் கொடுக்கப்பட்ட ஏ எஃப் டி, பாரதி, சுதேசி பஞ்சாலைகள் மற்றும் லிங்காரெட்டிபாளையம் சர்க்கரை ஆலை ஆகியவற்றை திறக்கின்ற எந்தவிதமான அறிவிப்பும் இல்லை. அதேபோல பத்தாயிரம் இளைஞர்களுக்கு வேலை கொடுக்கின்ற தொலைநோக்கு திட்டமும் இல்லை. போக்குவரத்து நெரிசலை சரி செய்கின்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துகின்ற திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை.

குறிப்பாக இதற்கு முன் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு தேவையான நிதி ஒதுக்கப்படவில்லை. ஆனால் அந்தத் திட்டங்கள் என்னவாகும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. மொத்தத்தில் இது ஒரு ஜீரோ பட்ஜெட். புதுச்சேரி மாநில மக்களை ஏமாற்றுகின்ற ஒரு நிதிநிலை அறிக்கை. இந்த நிதிநிலை அறிக்கையால் மிகப்பெரிய ஏமாற்றமே காணப்படுகிறது. மொத்தத்தில் இந்த நிதிநிலை அறிக்கை ஒன்றுக்கும் பிரயோஜனப்படாத வெறும் காகித புத்தகம் மட்டும்தான்" என்று விமர்சித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in