‘பைனாகுலர் வைத்தாலும் காங்கிரஸை கண்டுபிடிக்க முடியாது’ - அமித்ஷா கிண்டல்

அமித் ஷா
அமித் ஷா‘பைனாகுலர் வைத்தாலும் காங்கிரஸை கண்டுபிடிக்க முடியாது’ - அமித்ஷா கிண்டல்

கர்நாடகா சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த ஆண்டில் ஐந்தாவது முறையாக அம்மாநிலத்திற்கு வருகை தந்துள்ளார்.

கர்நாடகாவின் பிதார் பகுதியில் பாஜகவின் 'விஜய் சங்கல்ப் ரத யாத்திரை'யை கொடியசைத்து தொடங்கி வைப்பதற்கும், பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று வருகை தந்தார்.

பிதாரில் உள்ள குருநானக் ஜிரா சாஹிப் குருத்வாராவில் பிரார்த்தனை செய்த பின்னர் அங்கு நடைபெற்ற பேரணியில் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா, “ திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த மாநிலங்களில் இருந்து காங்கிரஸ் முற்றிலுமான அழிக்கப்பட்டு, பைனாகுலரில் கூட பார்க்க முடியாத வகையில் அக்கட்சி தோற்று விட்டது. வடகிழக்கில் பாஜக நுழைய முடியாது என்று கூறப்பட்டது, ஆனால் இரண்டாவது முறையாக அங்கே பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி அமைக்கப்படுகிறது. பிரதமர் மோடியின் மந்திரம் வடகிழக்கு, குஜராத், உத்திர பிரதேசம் அல்லது கர்நாடகா என எல்லா இடங்களிலும் வேலை செய்கிறது” என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in