'மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸை வலுப்படுத்துவார்' - ஆதரவு தெரிவிக்கும் ஜி23 தலைவர்

'மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸை வலுப்படுத்துவார்' - ஆதரவு தெரிவிக்கும் ஜி23 தலைவர்

காங்கிரஸ் கட்சிக்கு தேவையான ஸ்திரத்தன்மையை வழங்க முடியும் என்பதால், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மல்லிகார்ஜுன கார்கேவை ஆதரிப்பதாக ஜி23 தலைவர்களில் ஒருவரான எம்.பி மணீஷ் திவாரி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சசி தரூருக்குப் பதிலாக ஜி 23 தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கேவை ஆதரிப்பது குறித்து பேசிய மணீஷ் திவாரி, “கட்சியில் மிக அடிப்படையான பதவிகளில் இருந்து கார்கே பல வருடங்கள் போராடி இந்த இடத்துக்கு வளர்ந்துள்ளார். காங்கிரஸுக்கு ஸ்திரத்தன்மை தேவை, அதை கார்கே வழங்க முடியும் என்று நான் நினைக்கிறேன்” என அவர் தெரிவித்தார்

முன்னதாக, காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தனது போட்டியாளரான மல்லிகார்ஜுன கார்கேவை சில தலைவர்கள் வெளிப்படையாக ஆதரிக்கிறார்கள் என்று சசி தரூர் வருத்தப்பட்டார். மேலும், பல மாநில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் தேர்தல் பரப்புரைக்காகச் சென்றபோது தன்னை சந்திக்கவில்லை என்றும், ஆனால் கார்கே சென்றபோது அவரை சந்தித்தார்கள் எனவும் தெரிவித்தார்

காந்தி குடும்பத்துடன் நெருக்கமாக இருப்பதால் கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் மல்லிகார்ஜுன கார்கே "அதிகாரப்பூர்வமற்ற வேட்பாளராக" பார்க்கப்படுகிறார். காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17ம் தேதியும், முடிவுகள் அக்டோபர் 19ம் தேதியும் வெளியாகும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in