தமிழ்நாட்டிலேயே பெரிய கட்சி திமுக தான்; காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் பேட்டி!

திருச்சி எம்.பி., திருநாவுக்கரசர்
திருச்சி எம்.பி., திருநாவுக்கரசர்

தமிழ்நாட்டிலேயே பெரிய கட்சி திமுக தான் எனவும் திமுகவை வளர்க்க காங்கிரஸ் பாடுபடுகிறது என அண்ணாமலை கூறுவது அர்த்தமற்ற குற்றச்சாட்டு என காங்கிரஸ் கட்சியின் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் ஏற்பாட்டின் பேரில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியாக நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்ந்தெடுத்தனர். பணி நியமன ஆணைகளும் உடனடியாக வழங்கப்பட்டன. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், ”தமிழகத்திலேயே பெரிய கட்சி திமுக தான். திமுகவை வளர்க்க காங்கிரஸ் பாடுபடுகிறது என்று அண்ணாமலை கூறுவது அர்த்தமற்ற குற்றச்சாட்டு. 4 மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற ஆளுமை தலைவர்களை உருவாக்கிய தோழமை கட்சியையே விரட்டி விட்ட மாமேதை அண்ணாமலை. மகளிர் உரிமை மாநாடு பெரியார் அண்ணா காலத்தில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது.

திருச்சி எம்.பி., திருநாவுக்கரசர்
திருச்சி எம்.பி., திருநாவுக்கரசர்

இன்று நாட்டில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுக்கவும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வும் இந்த மாநாடு நடைபெறுகிறது. எல்லா கட்சியும் விளம்பரத்திற்காகத்தான் நிகழ்வுகள் நடத்துகிறது. விளம்பரத்தின் மூலம் தான் கட்சியை வளர்க்க முடியும். அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்வதற்கு என்ன சொல்வது. சோனியா காந்தி ஒரு புரட்சி பெண்மணி. காங்கிரஸ் கட்சியின் நலனுக்காக 20 ஆண்டுள் தலைவர் பதவியை ஏற்று உழைத்தவர். சோனியா காந்தி தமிழக காங்கிரஸ் தலைவர்களை ஒற்றுமையாக இருக்க சொன்னது நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு சொன்னது. அதற்காக எங்களுக்குள் சண்டை இருந்ததாக அர்த்தம் இல்லை.

கட்சி தலைவர் பதவிகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் மாற்றப்படுவது எல்லா கட்சியிலும் உள்ள நடைமுறை. அதே போல் தமிழக காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் பதவியும் மாற்றபடாலாம். அடுத்ததாக யாருக்கு வேண்டுமானாலும் அந்த பதவி வழங்கப்படலாம். அப்படி எனக்கு அந்த பதவியை கொடுத்தாலும் வேண்டாம் என்றா சொல்வேன். அதே வேளையில் இளைஞர்களுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கலாம். நான் மீண்டும் திருச்சி தொகுதி நாடாளுமன்ற தொகுதியில் தான் போட்டியிட விரும்புகிறேன். அதற்கான முடிவை கட்சியின் தலைமை தான் எடுக்கும். அதற்கான வாய்ப்பை திமுக வழங்கும் என நம்புகிறேன். நான் இங்கு இருந்து இருந்தால் புதுக்கோட்டை எம்பி தொகுதி பறிபோனதை தடுத்து இருப்பேன்.

திருச்சி எம்.பி., திருநாவுக்கரசர்
திருச்சி எம்.பி., திருநாவுக்கரசர்

ஜெய் ஸ்ரீ ராம் முழக்கத்தை இந்தியா பாகிஸ்தான் விளையாட்டு போட்டியின் போது எழுப்பியது கண்டனத்துக்குரியது. 120 கோடி மக்களின் பிரதிநிதிகள் உள்ள நாடாளுமன்றத்திலும் இதேபோல் ஜெய் ஸ்ரீ ராம் முழக்கத்தை எழுப்புகின்றனர். இது போல பொது இடங்களில் மத பிளவை ஏற்படுத்தும் வகையில் கோஷங்களை எழுப்புவது கண்டிக்கத்தக்கது.

பாஜகவில் இருந்து அதிமுக பிரிந்துள்ளதால் சிறுபான்மையினர் வாக்குகள் சிறிது அக்கட்சிக்கு செல்ல வாய்ப்புள்ளது. தமிழகத்தில் மட்டுமல்லாமல் தேசிய அளவில் அந்தந்த தொகுதிகளில் எந்த சாதி அதிகம் உள்ளனரோ அவர்களுக்கு தான் வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. சாதி, அரசியலில் ஒரு முக்கிய பகுதியாக உள்ளது. சாதியை ஒழிக்க வேண்டும் என்றால் இட ஒதுக்கீட்டையும் கொடுக்க முடியாது. இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்றால் சாதி இருக்க வேண்டும். இதனால்தான் சாதி வாரிய கணக்கெடுப்பு வேண்டும் என்று காங்கிரஸ் கூறுகிறது. இதை நிறைவேற்றினால் தான் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடை அமல்படுத்த முடியும் என்பது நிதர்சனம் என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in