
மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் பாஜகவில் ஐக்கியமாகியுள்ளது பரபரப்பை உருவாக்கியுள்ளது.
மத்திய பிரதேசம் கார்கோன் மாவட்டம் பர்வாஹா சட்டப்பேரவைக்கு காங்கிரஸ் சார்பாக 2018 தேர்தலில் போட்டியிட்டு வென்றவர் சச்சின் பிர்லா (40). அவர் மபி குர்ஜார் இன மக்கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றார். காங்கிரஸ் தலைமை மீது சச்சின் பிர்லாவுக்கு இருந்த அதிருப்தி காரணமாக கடந்த 2021ம் ஆண்டு பாஜவுக்கு தனது ஆதரவை வெளிப்படையாக தெரிவித்தார்.
இருந்தாலும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அவரை சமாதானம் செய்து வந்தனர். அத்துடன் அவரை காங்கிரசிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் காங்கிரஸ் எம்.எல்ஏவாக இருந்தவாறே பாஜவுக்கு தன் ஆதரவை தெரிவித்து வந்தார். தற்போது தேர்தல் நெருங்குவதால் அவர் பாஜகவில் நேற்று முறைப்படி இணைந்தார்.