மோடி படத்துடன் சுடுகாட்டுக்குப் போன காங்கிரஸ் கட்சியினர்: குமரியில் வினோத போராட்டம்

மோடி படத்துடன் சுடுகாட்டுக்குப் போன காங்கிரஸ் கட்சியினர்! குமரியில் வினோத போராட்டம்
மோடி படத்துடன் சுடுகாட்டுக்குப் போன காங்கிரஸ் கட்சியினர்! குமரியில் வினோத போராட்டம் மோடி படத்துடன் சுடுகாட்டுக்குப் போன காங்கிரஸ் கட்சியினர்! குமரியில் வினோத போராட்டம்

பிரதமர் நரேந்திர மோடி படத்துடன் சுடுகாட்டுக்குப் போய் காங்கிரஸ் கட்சியினர் மொட்டை போட்டு போராட்டம் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடி குறித்து விமர்சித்ததால் ராகுல் காந்திக்கு நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தியை எம்.பி பதவியில் இருந்தும் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். டெல்லியில் அவருக்கு வழங்கப்பட்ட அரசு வீடும் திரும்பப் பெறப்பட்டது. இதற்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வலுவாக இருக்கும் குமரி மாவட்டத்திலும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், நாகர்கோவில் மாநகர காங்கிரஸ் தலைவர் நவீன்குமார் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் சிலர் நாகர்கோவிலில் உள்ள அனைத்து சமூகத்திற்கான பொதுச் சுடுகாட்டிற்கு இன்று சென்றனர்.

அவர்கள் கையில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தையும் கொண்டு சென்றனர். சுடுகாட்டில் கையில் பிரதமர் மோடி படத்துடன் மொட்டை போட்டுக் கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in