15 தொகுதிகள் கேட்கணும்... திமுகவை நெருக்கும் காங்கிரஸ்; நடக்கப்போவ‌து என்ன?

காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டம்
காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டம்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 15 தொகுதிகள் வழங்க வலியுறுத்த வேண்டும் என காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் 'இந்தியா' கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு தொடர்பான அதிகாரபூர்வமற்ற பேச்சுகள், ஆலோசனைகள் தொடர்ந்து  நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்கள் கட்சி நிர்வாகிகளை கூட்டி தங்களது  தேர்தல் உத்திகளை வகுத்து வருகின்றன.

சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் நடைபெற்ற  இந்த கூட்டத்துக்கு முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு உள்ளிட்ட பலரும் அழைக்கப்படவில்லை. அழகிரியின் ஆதரவாளர்களே பெரும்பாலானவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.

இந்த கூட்டத்தில் திமுக கூட்டணியில் எத்தனை தொகுதிகள் கேட்கலாம் என்பது குறித்து  ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் 9; புதுச்சேரியில் 1 தொகுதி என மொத்தம் 10 தொகுதிகளை திமுக தலைமை காங்கிரஸுக்கு ஒதுக்கியது. இந்த முறை இந்த 10 தொகுதியையும் அப்படியே வாங்கிவிட வேண்டும் என இந்தக் கூட்டத்தில் ஒருதரப்பினர் வலியுறுத்தினர்.

அதேநேரத்தில் 2009-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸுக்கு 15 தொகுதிகள் கொடுத்தனர். இப்போதும் அந்த 15 தொகுதிகளை நாம் கேட்டுப் பெற வேண்டும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையும் போது தமிழ்நாட்டில் கணிசமான எம்.பி.க்கள் இருக்க வேண்டும் எனவும் மாவட்ட தலைவர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர்.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

ஆனால் எதிர்வரும் தேர்தலில் காங்கிரஸுக்கு ஒற்றை இலக்கத்திலான  இடங்களைத்தான் திமுக கொடுக்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.  5 முதல் 7 தொகுதிகளை மட்டுமே தர விரும்புகிறது. டெல்லி காங்கிரஸ் மேலிடம் ஏதேனும் நெருக்கடி கொடுத்தால் அதிகபட்சம் 8 தொகுதிகள்தான் காங்கிரஸுக்கு கிடைக்கும். அவர்கள் நினைப்பது போல 15 தொகுதிகளுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.


இதையும் வாசிக்கலாமே...

உத்தராகண்ட் சுரங்க விபத்து; 41 தொழிலாளர்களின் நிலை என்ன? வெளியானது வீடியோ

பரபரப்பு.. வைரமுத்துவை மகளிர் ஆணையம் விசாரிக்க வேண்டும்... ஹெச்.ராஜா வலியுறுத்தல்!

இறப்புக்கு முன் நடிகர் மாரிமுத்து வெளியிட்ட வீடியோ... ரசிகர்கள் உருக்கம்!

ரூ.1,760 கோடி பணம், மதுபானம் பறிமுதல்! தேர்தல் ஆணையம் அதிரடி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in