டிகே சிவக்குமார்
டிகே சிவக்குமார்டி.கே.சிவக்குமாருக்கு வழங்கப்பட்ட இரண்டு வாய்ப்புகளையும் நிராகரித்தார்: காங்கிரஸுக்கு முற்றுகிறது நெருக்கடி!

டி.கே.சிவக்குமாருக்கு வழங்கப்பட்ட இரண்டு வாய்ப்புகளையும் நிராகரித்தார்: காங்கிரஸுக்கு முற்றுகிறது நெருக்கடி!

டெல்லியில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் டி.கே.சிவகுமாருக்கு இரண்டு வாய்ப்புகளை வழங்கினர். ஆனால் அவர் இந்த இரு வாய்ப்புகளையும் நிராகரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கர்நாடக முதல்வர் பதவி குறித்த சஸ்பென்ஸ் இன்று 4-வது நாளை எட்டியுள்ளது. சித்தராமையா இரண்டாவது முறையாக முதல்வர் பதவிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் மாநில தலைவர் டி.கே.சிவக்குமாரின் ஒப்புதலைப் பெற காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது. டெல்லியில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் டி.கே.சிவக்குமாருக்கு இரண்டு வாய்ப்புகளை வழங்கினர். ஆனால் அவர் இந்த இரு வாய்ப்புகளையும் நிராகரித்தார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

முதல் வாய்ப்பாக, சிவக்குமாருக்கு மாநிலத்தின் தனி துணை முதல்வர் பதவியுடன் அவருக்கு விருப்பமான ஆறு துறைகள் ஒதுக்கப்படும். மேலும் அவரது மாநில தலைவர் பதவியையும் தொடர வழிவகை செய்யப்படும்.

இரண்டாவது வாய்ப்பாக சிவக்குமார் மற்றும் சித்தராமையா அதிகாரத்தை பகிர்ந்துகொள்ள வேண்டும். இதன்படி, சித்தராமையா இரண்டு ஆண்டுகள் முதல்வர் பதவியைப் பெறுவார் என்றும், அதைத் தொடர்ந்து சிவக்குமார் மூன்று ஆண்டுகள் முதல்வராக இருப்பார்

ஆனால் இந்த விருப்பம் இரு தலைவர்களாலும் ஏற்கப்படவில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த நான்கு ஆண்டுகளாக தனது பணியை மேற்கோள் காட்டி, சிவக்குமார் முதல்வர் பதவியை கேட்டு வலியுறுத்தி வருகிறார். அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தீர்வு காணத் தவறினால் அடுத்த ஆண்டு மக்களவை பொதுத் தேர்தலில் காங்கிரஸுக்குப் பலத்த இழப்பு ஏற்படலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in