தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு செக்... திருநாவுக்கரசருக்கு புதிய பொறுப்பு வழங்கியது காங்கிரஸ் தலைமை!

திருச்சி எம்.பி., திருநாவுக்கரசர்
திருச்சி எம்.பி., திருநாவுக்கரசர்

திருச்சி காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசரை தெலங்கானா தேர்தல் பார்வையாளராக நியமித்து அகில இந்திய காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது.

5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் வெற்றிப் பெற வேண்டிய சூழலில் காங்கிரஸ் கட்சி உள்ளது. ஏனெனில் இந்த தேர்தல் முடிவுகள் வர இருக்கின்ற மக்களவை தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால் காங்கிரஸ் மிகவும் கவனமாக காய்களை நகர்த்தி வருகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசையை தெலங்கானா ஆளுநராக நியமித்து பாஜக அரசியல் செய்யும் நிலையில், நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் தமிழிசையின் பங்கு அங்கு அதிகமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.

அதனை முறியடிக்கும் விதமாக தமிழகத்தைச் சேர்ந்த சு.திருநாவுக்கரசர் எம்.பி. தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அகில இந்திய காங்கிரஸ் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில், “காங்கிரஸ் தலைவர் ஒப்புதலின்பேரில் தெலங்கானா தேர்தலுக்கு தயாராகும் வகையில் காங்கிரஸ் கட்சிக்கு பார்வையாளராக திருநாவுக்கரசர் எம்.பி., நியமிக்கப்பட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in