இமாச்சலப் பிரதேச தேர்தலில் பாஜகவை பின்னுக்குத் தள்ளி முன்னிலை பெறும் காங்கிரஸ்

இமாச்சலப் பிரதேச தேர்தலில் பாஜகவை பின்னுக்குத் தள்ளி முன்னிலை பெறும்  காங்கிரஸ்

இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

இமாச்சலப்பிரதேச சட்டப்பேரவை 68 உறுப்பினர்களைக் கொண்டது. இதற்கு ஒரே கட்டமாக நவ.7-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இமாச்சல பிரதேச மாநிலத்தில் முதல்வர் ஜெய்ராம் தாக்குர் தலைமையில் தற்போது பாஜக ஆட்சி நடந்து வந்தது. அங்கு மீண்டும் ஆட்சியை அமைக்கும் பொருட்டு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதேபோல், காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், தேர்தலில் 65.92 சதவீத வாக்குகள் பதிவாயின. இன்று காலை 8 மணி தொடங்கி வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. கருத்துக் கணிப்புகள் பலவும் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ளன. இன்னும் சில கருத்துக் கணிப்புகள் காங்கிரஸுக்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகின்றன.

ஆரம்பக்கட்ட வாக்கு நிலவரத்தின்படி காங்கிரஸ் முன்னிலை வகித்தாலும் வித்தியாசம் சற்று குறைவாக இருப்பதால் தேர்தல் முடிவுகள் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. ஆனால், பாஜக முதல்வர் வேட்பாளரான ஜெய்ராம் தாக்கூர் சோரஜ் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார். தற்போது காங்கிரஸ் 36 இடங்களிலும், பாஜக 32 இடங்களிலும் முன்னிலைப் பெற்றுள்ளன. இதனால் காங்கிரஸ் கட்சியினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in