இமாசல பிரதேச தேர்தலில் பெரும்பான்மையை கைப்பற்றும் காங்கிரஸ் - பாஜகவுக்கு சரிவு!

இமாசல பிரதேச தேர்தலில் பெரும்பான்மையை கைப்பற்றும் காங்கிரஸ் - பாஜகவுக்கு சரிவு!

இமாசல பிரதேச சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது.

இமாசல பிரதேச சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே இழுபறி நீடித்தது. மொத்தமுள்ள 68 தொகுதிகளில் தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 38 இடங்களிலும், பாஜக 27 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. சுயேட்சைகள் 3 இடங்களில் முன்னிலையில் உள்ளனர்.

இமாசல பிரதேச சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 68 இடங்களில் பெரும்பான்மைக்கு 35 இடங்கள் தேவை. காலை முதலே தொடர்ந்து இழுபறி நீடித்துவந்த நிலையில், தற்போது காங்கிரஸ் 38 இடங்களில் முன்னிலையில் உள்ளதால் அக்கட்சியினர் உற்சாகத்துடன் உள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in