நடைபயணத்தின்போது சரிந்து விழுந்த காங்கிரஸ் மூத்த தலைவர்: பாரத் ஜோடோ யாத்திரையில் சோகம்

நடைபயணத்தின்போது சரிந்து விழுந்த காங்கிரஸ் மூத்த தலைவர்: பாரத் ஜோடோ யாத்திரையில் சோகம்

காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்ராவில் பங்கேற்ற அக்கட்சியின் மூத்த தலைவர் கிருஷ்ண குமார் பாண்டே இன்று மரணமடைந்தார்.

மகாராஷ்டிராவில் நுழைந்த பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணகுமார் பாண்டே இன்று உயிரிழந்தார். பாரத் ஜோடோ யாத்திரையின் போது காங்கிரஸ் தலைவர் இறந்ததை உறுதிப்படுத்திய ஜெய்ராம் ரமேஷ், “பாரத் ஜோடோ யாத்ராவின் 62வது நாளான இன்று காலை, சேவா தளத்தின் பொதுச் செயலாளர் கிருஷ்ணகுமார் பாண்டே தேசியக் கொடியை ஏந்திக்கொண்டு திக்விஜய் சிங் மற்றும் என்னுடன் நடந்து கொண்டிருந்தார். சில நிமிடங்களுக்குப் பிறகு அவர் கொடியை சக ஊழியரிடம் கொடுத்துவிட்டு சரிந்து விழுந்தார். உடனடியாக அவர் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் ஒரு தீவிர காங்கிரஸ்காரர், நாக்பூரில் ஆர்எஸ்எஸ்-ஐ எதிர்த்துப் போராடினார்" என்று ட்வீட் செய்துள்ளார்.

பாரத் ஜோடா யாத்திரை கன்னியாகுமரியில் தொடங்கி 12 மாநிலங்கள் வழியாக ஜம்மு காஷ்மீரில் முடிவடையவுள்ளது. 150 நாட்களில் கிட்டத்தட்ட 3,500 கி.மீ இந்த நடைபயணம் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று காலை மகாராஷ்டிராவில் தனது பாரத் ஜோடோ யாத்திரையை மீண்டும் தொடங்கினார். 62வது நாளான இன்று காலை நாந்தேட் மாவட்டத்தில் உள்ள குருத்வாராவிற்கு நடைபயணம் சென்றது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in