மோடியின் பிரியாவிடை இன்னும் மூன்று வாரங்களில் நடக்க உள்ளது... உறுதிபடக் கூறும் காங்கிரஸ்!

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

மக்களவைத் தேர்தலில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு நேற்று முடிவடைந்துள்ள நிலையில் நான்கு கட்டத் தேர்தல்களும் பாஜகவுக்கு வீழ்ச்சியை  தந்திருப்பதாகவும்,  அதனால் இன்னும் மூன்று வாரத்தில் அக்கட்சிக்கு மக்கள் பிரியாவிடை அளிப்பார்கள் என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

ஜெய்ராம் ரமேஷ்
ஜெய்ராம் ரமேஷ்

மக்களவைக்கான  நான்காம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இத்துடன் நாடு முழுவதும் 379 தொகுதிகளில் தேர்தல் நிறைவடைந்து விட்டது. பலத்த போட்டி நிலவிய இந்த நான்கு கட்டத்திலும் மக்களின் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்து இருப்பதாக காங்கிரஸ் கட்சி மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில்,"தற்போது நான்கு கட்டத் தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில் மோடியின் பிரியாவிடை இன்னும் சரியாக மூன்று வாரங்களில் நடக்க உள்ளது. தெற்கில் தெளிவாக தெரிகிறது. வடக்கு மேற்கு, கிழக்கில் கூட பாதிகூடக் கிடைக்காது. தென் மாநிலங்களில் பாஜக முற்றிலும் அழிக்கப்படும். மற்ற மாநிலங்களில் அதன் பலம் பாதியாகக் குறையும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ்

அதேபோல சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பாஜவுக்கு ‘00’ சான்ஸ் எனத் தெரிவித்துள்ளார்.  அகிலேஷ்யாதவ் தனது எக்ஸ் தளத்தில், " மக்களவை தேர்தல் நான்கம் கட்ட வாக்குப்பதிவுக்கு பிறகு, 400 தொகுதியில் வெல்வோம் என்ற பாஜகவின் கூற்றில் இருந்து பொதுமக்கள் ‘4’ ஐ காணாமல் ஆக்கியுள்ளனர். இப்போது பாஜக ஆட்சி அமைக்க 00   சதவீதம் வாய்ப்புக்கள் மட்டுமே உள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in