தெலங்கானாவில் நிச்சயம் காங்கிரஸ் ஆட்சிதான்... புதிய சர்வேயிலும் ஓங்கியது கை!

தெலங்கானா காங்கிரஸ்
தெலங்கானா காங்கிரஸ்

அடுத்த ஆண்டின் மக்களவைத் தேர்தலும், இந்த ஆண்டின் இறுதியில் 5 மாநில தேர்தல்களும் நடைபெறவுள்ள நிலையில், அது குறித்தான கருத்துக்கணிப்புகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என புதிய கருத்துக்கணிப்பு வெளிவந்துள்ளது.

இந்த ஆண்டின் இறுதியில் நாட்டின் 5 மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா மற்றும் சத்திஸ்கர் ஆகிய மாநில சட்டமன்றத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும், தெலுங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதி ஆகிய கட்சிகள் ஆட்சியில் உள்ளன. மத்திய பிரதேசத்தில் பாஜகவும், மிசோரத்தில் பாஜகவின் கூட்டணியில் இருக்கும் மிசோ தேசிய முன்னணி கட்சியும் ஆட்சியில் உள்ளது.

வரும் நாடாளுமன்ற தேர்தல் பாஜகவிற்கு எவ்வளவு முக்கியமோ அதே போல தான் இந்த 5 மாநில தேர்தலும் உள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு முன் தங்களது பலத்தை நிரூபித்து காட்டும் முனைப்பில் பாஜக இருக்கிறது. இதில் தென்னிந்தியாவில் நடைபெறும் ஒரே தேர்தல் தெலுங்கானா மாநிலம் தான். இங்கு சந்திர சேகர் ராவின் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சி அசுர பலத்துடன் இருந்து வருகின்றது. அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 119 இடங்களில் 99 இடங்களை பிடித்து தனி பெரும் கட்சியாக அக்கட்சி நீடித்து வருகின்றது.

தெலங்கானா தேர்தல்
தெலங்கானா தேர்தல்

ஆனால் இம்முறை நடைபெற போகும் தேர்தலில் அக்கட்சி ஆட்சியை இழக்கும் என கருத்துக்கணிப்புகள் உள்ளன. லோக்போல் சார்பில் நடத்திய புதிய கருத்துக்கணிப்பு முடிவுகளில் மொத்தமுள்ள 119 இடங்கள் ஆட்சியமைக்க தேவைப்படும் 60 இடங்களை எளிதாக காங்கிரஸ் கைப்பற்றும் என தெரிவிக்கப்ட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி 41 முதல் 44 சதவீத வாக்குகளை கைப்பற்றி 61 - 67 இடங்களைப் பெற்று ஆட்சியை கைப்பற்றும், ஆளும் பிஆர்எஸ் கட்சி 39 முதல் 42 சதவீத வாக்குகளைப் பெற்று 45 - 51 இடங்ககளை மட்டுமே வெல்லும். பாஜக 2 -3 இடங்களையும், ஓவைசியின் மஜ்லீஸ் கட்சி 6-8 இடங்களையும் கைப்பற்றும் என அந்த கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

மறக்காதீங்க... வங்கிகளில் ரூ.2000 மாற்ற நாளை கடைசி நாள்!

ஆர்பிஐ அதிரடி அறிவிப்பு; வங்கி வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

40 தொகுதிகளிலும் தனித்து போட்டி... திமுகவுக்கு எதிராக களமிறங்கும் ஆசிரியர்கள் சங்கம்!

அரியாசனம் காத்திருக்கு வா தலைவா... பரபரப்பை கிளப்பிய விஜய் ரசிகர்கள்!

சக வீரர்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்திய ராணுவ அதிகாரி - ஜம்மு காஷ்மீரில் பதற்றம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in